பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() அடிப்ப ையில் அல்லாமல், வேறு எவ்வாறு அதனை அடைய முடியுமென்று எனக்குப் புரியவில்லை." அதற்கு நேருஜி சொன்ன சமாதானம் பின்வருமாறு : "என் விருப்பப்படியே நாம் சோஷலிஸ் சமுதாயத்தை விரும்புகிருேம்' என்பதைக் குறிப்பிட்டால், வேறு சிலவற்றை யும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கும். அதைச் சிலர் ஒப்புக் கொள்ளலாம்; சிலர் ஒப்புக்கொள்ளாமலும் இருக்கலாம். இந்தத் தீர்மானம் சர்ச்சைக்குள்ளாவதை நான் விரும்பவில்லை. ஆகையால், வெறும் வார்த்தைகளையோ, சூத்திரத்தையோ உபயோகிக்காமல், நாம் அடைய விரும்புவதன் சாராம்சத்தை மட்டும் இதில் குறிப்பிட்டிருக்கிரும்.' நேருஜியின் சோஷலிஸக் கொள்கை பற்றி அக்காலத்தில் காந்திஜி கொண்டிருந்த கருத்தென்ன வென்பதை இங்கு ஒப்பு நோக்குதல் பொருத்தமாகும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் கொள்கையைப் பற்றியும், சோஷலிசத்தைக் குறித்தும், பண்டித ஜவாஹர்லால் நேரு கூறியவைகளைப் பற் றியும் குறிப்பிட்டு, 1933, டிசம்பர் 21-ம் தேதியன்று, மெட் ராஸ் மெயில் ஆசிரியர் காந்திஜியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது : என்னுடைய மனமெல்லாம் எரவாடாவில் இருக்கிறது. ஹரிஜன வேலைக்காக மட்டுமே நான் வெளியே வந்திருக் கிறேன். காங்கிரஸ் நிர்வாகத்தின் கடிவாளங்கள் என்னிடம் இல்லை. அவை ஜவாஹர்லாலின் கைகளிலேயே இருக்கின்றன. எனக்கு அவரிடம் முழுநம்பிக்கை இருக்கிறது. அவர் நல்ல விவேகி; தம்முடைய சகாக்களுக்குப் போதுமான அவகாசம் கொடுக்காமல், காங்கிரஸின் அடிப்படையான கொள்கையி லிருந்து விலகிச் செல்லமாட்டார். மிகவும் நிர்ப்பந்தமான நிலை எதுவும் ஏற்பட்டாலொழிய,தற்போது வகுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொள்கையிலிருந்து அவர் விலகிச் செல்லமாட் டார். சோஷலிஸத்தைப் பற்றி அவர் ஆணித்தரமான கருத் துக்கள் கொண்டிருக்கிருர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஜவாஹர்லால் என்னும் மாபெரும் சக்தியையும்,