பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சோஷலிஸம் சோஷலிஸத்திற்காகவே சுதந்தரம் அரசியல் சுதந்தரம், விடுதலை, அவசியம் என்ப தில் சந்தேகமில்லை, அவை சரியான திசையில் செல்வ தற்குரிய வழிகள்தாம்; ஆனல் சமுதாய சுதந்தரமும், சோஷலிஸ்ட் முறையில் அமைந்த சமுதாயமும், அர சாங்கமும் இல்லாமல், தேசமோ, தனி மனிதனே அதிக வளர்ச்சியடைய முடியாது.* + H # உலகம் முழுதும் சோஷலிஸம் பரவியுள்ளது நான் ஒரு சோஷலிஸ்டு என்பதையும், குடியரசுக் கொள்கையுடையவன் என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். உலகம் முழுதிலும் மனித சமுதாய அமைப்பில் சோஷலிஸ்த் தத்துவம் படிப்படியாக ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை காம் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதை எவ்வளவு வேகத்தில் அடையலாம் என்பதிலும், முன்னேறிச் செல்வதற்குரிய வழி முறை கள் என்ன என்பதிலுமே கருத்து வேற்றுமைகள் இருக் கின்றன. இந்தியா தனது வறுமையையும், ஏற்றத் தாழ்வுகளையும் ஒழிக்க விரும்பினால், அந்த வழியிலே தான் செல்லவேண்டி யிருக்கும். ஆல்ை அது அந்த லட்சியத்தைத் தன் மேதைக்குரிய முறையில் அமைத்