பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 துக் கொண்டு, தன் சொந்த வழிகளையும் வகுத்துக் கொள்ளும். நமது பொருளாதாரத் திட்டம் மானிட அமிசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், பணத் திற்காக மனிதனைப் பலியிட்டுவிடக் கூடாது. எந்தத் தொழிலாவது தன் உழைப்பாளர்களைப் பட்டினி போடாமல் நடக்க முடியாது என்று இருந்தால், அந்தத் தொழி2ல நிறுத்திவிட வேண்டும். கிலத்தில் பாடுபடு பவர்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை என் றல், அவர்கள் தங்களுக்குரிய முழு அளவு ஊதியத் தைப் பெற முடியாமல் பறிக்கும் இடைத் தரகர்களை நீக்கவேண்டும். -1929, இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையுரை. H o M உணர்ச்சியுடன் ஆராய்ச்சியும் வேண்டும் இந்தியாவில் சோஷலிஸ்த் துறையில் நான் முன் னணியில் நிற்கவில்'ல. மான் பின்னணியில் இருந் தேன் என்று கூடச் சொல்லலாம், Inான் வேதனையுடன், படிப்படியாக முன்னேறி வர்தேன், எனக்கு முன்னல் பலர் முன்னேறிச் சென்று தங்கள் வழியெங்கும் புக ழொளியைப் பரப்பி யிருந்தனர்... ...1927, டிசம்பர் மீ கான் ஐரோப்பாவிலிருந்து திரும்பி வருகையில், இந்தி யாவில் தெளிவில்லாத ஒரு வகையான சோஷலிஸம் பற்றிய செய்தி பரவியிருந்தது, அதற்கும் முன்பாகத் தனிப்பட்ட சோஷலிஸ்டுகள் பலர் இருந்தனர்..... சோஷலிஸம் வெறும் தருக்க வாதத்தில் மட்டும் முடிவு செய்யக் கூடிய விஷய மன்று. வாழ்க்கையை யும், அது சம்பந்தமான பிரசினேகளையும் பற்றி காம் மனப்பூர்வமாகக் கொள்ளும் கருத்தையும் கொண்டே அதைப்பற்றி முடிவு செய்யவேண்டி யிருக்கும்.