பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 அவருடைய குறிக்கோளையும் புரிந்துகொள்வதற்கு, இதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். ருசியப் பொதுவுடைம்ை அவருடைய குறிக்கோள் அல்ல. அவருடைய குறிக்கோள் இந்திய சோஷலிஸம். இந்த இரண்டின் அடிப்படைகளும் பொதுவானவை என்ருலும், இந்திய சோஷலிஸம் வேறு வகை யிலானது. நேருவின் கொள்கை இப்போது உருவாகிக் கொண்டு வருகிறது. இந்தியச் சூழ்நி2பகளுக்கான முறையில் சோஷலிஸத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது ஒர் உருவெடுக்கும் கட்டத்தில் இருக்கிறது. ஒரு கொள்கை என்ற முறையில் சோஷலிஸத்தை எல்லோரும் அறிந்திருக்கிருர்கள். ஆனல், கலப்படமில்லாத சோஷலிஸம் இந்தியாவின் சூழ்நிலை களில் பல சந்ததிகளுக்கு நிலைத்து நிற்கமுடியுமா என்பது ஒரு கேள்வி. சோஷலிஸத்தைப் பற்றி ஜவாஹர்லாலின் தீர்மான மான கருத்துக்கள் எனக்கு அச்சத்தைக் கொடுக்கவில்லை. அவைகளைக் கண்டு மற்றவர்களும் பயப்படவேண்டியதில்லை. ஜவாஹர்லாலைப் பற்றி நீங்களும் அச்சமடையாதீர்கள்.” இதுபற்றிக் காந்திஜி பேசியதையும், எழுதியதையும் சான்ருக எடுத்துக் காட்டுவதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு குறிப்பிடுவதற்கு இம்முன் னுரை இடந்தராதென அஞ்சுகிறேன். பூரீ மகாதேவ தேசாய் எழுதிய சில வாக்கியங்களுடன் இதை முடிக்கலாம். "ஏராளமான புத்தகங்களுடன் ஒருவர் ஒருநாள் அவரிடம் வந்தார். அந்தப் புத்தகங்களை நன்றியுடன் அவர் பெற்றுக் கொண்டார். ஆனால், அப்புத்தகங்களை எழுதியவராகிய அம் மனிதர், அப்புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை யென்றும், அவைகளைப் படிப்பதாக நேரு வாக்குறுதியளிக்க வேண்டு மென்றும் வற்புறுத்தியபோது, நேரு சொன்னர் : 'நீங்கள் உங்களுடைய மதத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். நல்லது, நான் சொல்லி விடுகிறேன். என்னுடைய மதம் சோஷலிஸம்தான். எனக்கு வேறு மதம் இல்லை. இந்தியாவின் வறுமையையும் துயரையும் போக்குவதற்கான வழி எதையும் கருத எந்தப் புத்தகத்தையும் படிக்க எனக்கு நேரம் இல்லை.”