பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H{) தனி மனிதர் சுதந்தரம் அதிகமாகும் சோஷலிஸ் அமைப்பின் கீழ் தனி மனிதனுக்கு ஏராளமான சுதந்தரம் ஏன் இருக்க முடியாது என்பது எனக்குப் புலப்படவில்லை; இப்போதுள்ள அமைப்பின் கீழே கிடைக்கும் சுதந்தரத்தைக் காட்டிலும் மிக அதிகமாகவே கிடைக்கும். அவன் தன் மனச் சாட்சி யின்படி நடக்கவும், மனம்போல் வாழவும், பிரியமான தொழிலைச் செய்யவும், ஒரு கட்டுப்பாட்டிற்குள் அடங்கிச் சொந்தமாகத் தனிச் சொத்து வைத்துக் கொள்ளவும் முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரப் பாதுகாப்பிலிருந்து கி ைட க் கும் சுதந்தரமும் அவனுக்கு உண்டு. அத்தகைய சுதந்தரம் இப்பொழுது மிகச் சிலருக்கே கிடைத்திருக்கிறது. * 事 எல்லாம் இந்திய மக்களுக்காகவே நான் கம்யூனிஸத்திற்கு எதிராக இருக்கவில்லை. நான் சோஷலிஸத்திற்கு எதிராக இருக்கவில்லை. ஒரே விஷயம் என்னவென்றல், நான் இந்தியாவுக்காக இருக்கிறேன், வேறு எவருக்காகவும் அன்று. கான் இந்திய மக்களின் சார்பில் நிற்கிறேன். -26.12.55-ல் திரிச்சூரில் செய்த சொற்பொழிவு. - FE + கம்யூனிஸ்மும் ஃபாசிஸ்மும் ஏதாவது ஒரு வகையான கம்யூனிஸம் அல்லது ஏதாவது ஒரு வகையான ஃபாசிஸம் (யதேச்சாதி காரமுள்ள சர்வாதிகாரக் குழுவின் ஆட்சி) ஆகிய இந்த இரண்டு அமைப்புக்களில் ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இன்று உலகத்திற்கு