பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90

உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள், அறிவொளியும், உணர்வின் ஓட்டமும், அழகு நயங்களும் செறிந்து, ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இலக்கியப் படைப்புகள் அவை,


11. சரஸ்வதியில்


மீண்டும் புதுக்கவிதையும், அது பற்றிய பேச்சும் எழுந்தது 1958-ல் தான். இப்போது கவிதை எழுதி கட்சி கட்டியவர் க. நா. சுப்ரமண்யம்.

‘சரஸ்வதி’ கவிதையில் விசேஷ அக்கறை காட்டியதில்லை. இரு இலக்கியப் பத்திரிகை என்றால் அதில் கவிதையும் இடம் பெறவேண்டும் என்ற நோக்கிலே தான் ‘சரஸ்வதி’ கவிதைகளை பிரசுரித்துக் கொண்டிருந்தது. மரபுக் கவிதைகள் தான் அதில் வெளிவந்தன. இரண்டு மூன்றாவது வருடங்களில் ஒரு கவிதை கூட இடம் பெறாத இதழ்கள் பல உள்ளன. அதன் பின்னரும் கூட இந்த நிலைமையில் தீவிர மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

ஐந்தாவது ஆண்டில், ‘சரஸ்வதி’ மாதம் இருமுறைப் பத்திரிகையாக மாற்றப்பட்ட போது, க. நா. சு. அதிகமான ஒத்துழைப்பு தர முன் வந்தார். அப்போது அவர் புதுக் கவிதையும் எழுதி உதவினார்.

※20-9-1918 இதழில் அவர் ‘மயன்’ என்ற பெயரில் எழுதிய கவிதை பிரசுரமாயிற்று. அது தான் ‘சரஸ்வதி’யில் பிரசுரமான முதலாவது புதுக் கவிதை.


மின்னல் கீற்று

"புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக் கொண்டு நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை பெய்தால், நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன். தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல்-ஆஹா! இன்பம்! சட்டச் சடவென்று பத்துத் தூற்றல்-ஆஹா! ஆஹர!