பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

உண்மையை அலசிப் பிய்த்து எடுத்துப் பார்க்க முடியாது. ஆனல் சூசஷ்மமாக இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர் இது.

இந்தக் கவிதை உண்மைக்கு இன்றை வாரிசாக புதுக் கவியும் புதுக் கவிதையும் தோன்ற வேண்டும்.

பாரதியார் மக்களிடையே பொதுவாகவும் தனித் தனியாகவும் கண்ட குறைகளுக்கு எல்லாம் சுதந்திர மின்மையே காரணம் என்று நம்பினுர், சுதந்திரம் வந்து விட்டால் அக் குறைகள் தானகவே நீங்கிவிடும் என்றும் நம்பினுர், சுதந்திரம் வந்துவிட்ட து. தனி மனிதர்களின் குறைகள் பன்மடங்காக அதிகரித்து விட்டது போல் இருக்கிறது. பொது வாழ்வு, சமுதாயம் பற்றியோ கேட்கவே வேண்டாம். பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் மட்டுமல்ல; நல்லது, தீயது அடிப்படையிலும், ஆன்மீக பாரமாத்திகத் துறைகளிலும் போலிகளும் மோசடி களும் மலிந்து விட்டன. குறைகள் நிறைந்து நிற் கின்றன.

கவிதை மனிதனின் குறைகளைப் பற்றி மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம். குறையைச் சொல்வதும், நிறையைச் சொல்வதும் ஒன்று தான். ஒன்றைச் சொல்லி மற்றென்றை விடமுடியாது. இலக்கியத் துறைகள் எல்லாமே சமுதாயம், தனி மனிதன் என்கிற இரண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளியும் சொல்லியும் சொல்லா மலும் அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி. இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக் கேற்ற சிக்கலான வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்கு வதற்கு புதுக் கவிதை தேவை. அப்போது தான் சங்க காலத்தின் சிறந்த கவிதை சிருஷ்டிகளையும், சிலப்பதி காரம், கம்ப ராமாயணம் போன்ற நூல்களின் தனித் தன்மையையும் நாமும் இன்று எட்டமுடியும். இன்றும்