பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

"இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தம்ாக மாறுபட்ட கருத்துக்களுக்கு களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும் என்றும் தெளிவுபடுத்திக் கொண்டது. "சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து புதுத் தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயல்கிறவர்களின் படைப்புக்களே வரவேற்பது என்பதை எழுத்து தனது லட்சியமாக வரித் துக் கொண்டது. - - -

அதனால், கவிதைத் துறையில் புதுக்கவிதைக்கு அது இடம் அளிக்க முன் வந்தது.

முதல் இதழில் ந. பிச்சமூர்த்தியின் பெட்டிக் கடை நாரணன்" என்ற கவிதை வெளி வந்தது. அது எழுத்துக்காக விஷேமாக எழுதப்பட்டது அல்ல. பங்கீட்டு முறை அமுலில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கவிதை. -

எப்படியும் பிழைப்பது என்று துணிந்து விட்ட நாரணன் பெட்டிக் கடை வைத்து, ஏற்றம் பெற்று, மளிகைக் கடை முதலாளி ஆகி, மண்ணெண்ணெய் பங்கீடு, அரிசிப் பங்கீடு ஆகியவற்றின் துணையோடு பெரும் பணக்காரன் ஆனதை அழகாக வர்ணிக்கும் கவிதை. வாழத் தெரிந்தோர் கையாளும் யுகதர்மங்களையும் அவர்களுடைய வாழ்க்கை நோக்கை”யும் சுவையாகவும், கிண்டல் தொனியோடும் இக் கவிதை எடுத்துச் சொல்கிறது. - - க. ந. சுப்ரமண்யம் கவிதைகள் இரண்டு கவிதை” என்ற சொந்தப் படைப்பும், 'ஆங்கிலக் கவி ஒருவர் எமூதியதைப் பின்பற்றி எழுதப்பட்ட வர்ணம் என்பதும்-வந்திருந்தன. . முதல் வருடத்தில் ந. பி. கவிதைகள் மூன்றே மூன்று தான் (பெட்டிக் கடை நாராணன், விஞ்ஞானி, கலீல் கிப்ரான் தமிழாக்கமான ஜீவா தயவுகாட்டு") பிரசுரமாயின. 1, 2, 3 ஏடுகளில்.

  • எழுத்து முதல் ஐந்து ஏடுகளில் க. நா. சுப்ரமண்யம் கட்டுரைகளும் கருத்துக்களும் மிக அதிகமான இடம் பெற்றி