பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

மனிதன் உயிரின் பெருவெள்ளத்திலிருந்து பிரிந்த தனித் துளி மூலத் தொடர்பறுந்து வாழ்வெனும் துயரக்கடவில் விழுந்து தத்தளிப்பதாகக் கருதி த.விக்கும் ஜீவன், இந்தப் பிரிவினைத் துயரத்திற்கு வேதனைப்படுவது போன்ற வேதனை தரும் சொற்களையும் இவ்வேகத்துடன் கோர்த்து விட்டால் இசை கவிதையாகி விடுகிறது. காற்றில் தோன்றி காற்றில் மறையும் இசை கால் பெற்று நிலத்து உணர்ச்சிக்குத் தீ யூட்டும் சிறப்பை அடைகிறது. இப்பொழுது இசை வெறும் குறிப்பற்ற கிளர்ச்சியாக இல்லாமல் பொருளுள்ள பாட்டா கிறது. கவிதையாகிறது.

ஆல்ை ஒன்று. இரண்டு வகையிலும் காதென்னும் பொறி வழியேதான் இந்த இன்பமும் அனுபவமும் தோன்றியாக வேண்டி இருக்கிறது. காதை முன்னிறுத்தியே இதுவரை கவிதை எழுதப்பட்டு வந்திருக்கிற தென்பதை இங்கு நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இன்னும் கவிஞர்களில் பலர் கவிதை புனைவதற்குமுன் சந்தத்தையோ பாவகைகளின் இரண்டொரு வரிகளையோ நினைவில் கொண்டு பரிசலாக்கி கவிதையின் சொற்களை மீதேற்றி கவிதை புனேவது எனக்குத் தெரியும். யாப்பிலக்கண அறிவின்றியே வெற்றிகரமாக கவிஞர்கள் இந்தக் காரணத்தினுல்தான் ஒலிக் குற்றமின்றி கவிதை புனைய முடிகிறது. . .

இப்பொழுது முக்யமான பிரச்னை என்னவென்ருல், காதை நம்பாமல் கவிதையைத் தோற்றுவிக்க முடியாதா என்பதுதான். அனுபவத்தில் புதுமையைக் காட்ட விரும்பும் கவிஞன் இது இயலும் என்பதைக் கண்டான், கருத்திலே மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே, சுட்டிக் காட்டும் பேருண்மையிலே கவிதை பொதிந்து கிடக்கிறதென்ற உண்மையைப் புதுக்கவிஞன் கண்டுபிடித்தான். கவிதை சொற்களில் இல்லை, ஒலிநயத்தில் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். இரண்டுக்கும் காரணமான தன் னிடத்தில் இருக்கிறதென்ற பேருண்மையை, அதிருஷ்ட