பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3

வசத்தால் தான் பெற்ற அனுபவத்தில் இருக்கிறதென்ற ரசனே துட்பத்தை உணர்ந்தான்.

இந்த அடிப்படையின் மீது பார்க்கும் பொழுது கவிதை காதை நம்பித்தான் வாழ வேண்டுமென்ற அவசியம் தோன்றவில்லை. கவிதையின் மரபுக்கொத்த அங்கங்களும் இக்கருத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன. கவிதைக்கு உயிர் நாடியான உவமை அணி பெரும்பாலும் கண்ணேச் சார்ந்த அலங்காரம், காதிை நம்பிக் கவிதை பிறக்க வேண்டியிருந்த நிலையிலும்கூட, கவிதையின் சிறப்பெல்லாம் ஐம்பொறிகளின் தயவையும் மீறிய நேரிடையான அனுபவத் தால், இயற்கையான நுண்ணுணர்வால், ஏற்படுவதென்ற உண்மையை எப்படி மறந்துவிட முடியும்?

இந்த உண்மையின் காரணமாகவே, ஒரு பொறிக்கு உரித்தான தொழிலை மற்ருெரு பொறியின் மீதேற்றி கவிதையில் சிறப்பைக் கூட்டும் கற்பனை முறை கையாளப் பட்டு வந்திருக்கிறது. -

ஒரு உதாரணத்தைக் கொண்டு இதை ஆராய்வோம். ஆளுல் ஒரு எச்சரிக்கை. இது இலக்கிய விசாரமே யன்றி, மன இயல் விமர்சனமே அன்றி, சரித்திர ரீதியான தொடரல்ல என்பதை மறக்கலாகாது. செந்தமிழ் நாடென்னும் போதி னிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியார் பாடிஞர். இயற்கையாக ருசியை நாக்கின் மூலமே உணர்கிருேம். காதின் மூலம் இந்த ருசியை உணரலாம் என்பது இயற்கைக்கு முரண்பட்டது. ஆல்ை கவிஞர் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்கிருரே. நாக்கின் தொழிலக் காதின் மேலேற்றித் திடுக்கிடும் புதிய அனுபவத் தைக் கூறுகிருரே! ஆம். நாக்குக்கு இனிப்பாவது போல காதுக்கு இனிப்பாக இருக்கிறது என்கிருச். அதாவது பொறிகளுக்குள்ள வேறுபாடு உடலியலைப் பற்றிய வரையில் உண்மையே ஒழிய மன இயலைப் பற்றிய வரையில் வேறு பாடாகாது. இரண்டின் விளைவும் ஒன்று தான் என்ற தத்வ ரகசியத்தை மறை முகமாகக் காட்டுகிருர். -