பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

கு. ப. ராஜகோபாலன் ஒாளவும் நான் சற்று விரிவாக வும் வல்லிக்கண்ணன் சிறிதும் இத்துறையில் சோதனைகள் செய்துள்ளோம்.

புதுமைப்பித்தன் தம் கவிதையில் புதிய கவிதா சோதனை நடத்தினர். ஆல்ை பெரும் பகுதிகள் கவி வெண்பாவாகவே ஒலிக்கின்றன. இச்சோதனையை இப்பொழுது சிலர் தொடர்ந்து செய்வது வரவேற்கத்தக்கது. வெற்றி தோல்வி கவிஞனுக்கு இல்லை."

14. புதுக்கவிதை பற்றி

பிச்சமூர்த்தி கட்டுரை பிரசுரமானதற்குப் பிறகு, எழுத்து ஏட்டில் கவிதை, வசன கவிதை பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இடம் பெற்றன. 'எமுத்து 15-வது ஏட்டில் தலையங்கப் பகுதியாக, ஆசிரியர் தனது எண்ணங் களே வெளியிட்டிருந்தார். எமுத்து அரங்கம் பகுதியில், இலங்கை ஆர். முருகையனும், திருப்பத்துார் பொ. சுந்தர மூர்த்தி நயினரும் தங்கள் கருத்துக்களை விரிவாக எழுதியிருந் தனர். எஸ், முருகையன் எழுதிய கவிதைக் கலை என்ருெரு கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. "ஃப்ரி வெர்ஸ்’ பற்றிய அரைப்பக்க விளக்கம் ஒன்றும் காணப்பட்டது,

புதுக்கவிதை வேறு, வசன கவிதை வேறு என்று பிரித்துப் பேச முற்பட்ட எழுத்து ஆசிரியர், ந.பி. யின் சில அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட கருத்துக்களே வலியுறுத்திய தும் குறிப்பிடத் தகுந்ததாகும். அதன் முக்கியத்துவம் கருதி, புதுக்கவிதை பற்றி என்ற எழுத்து (மார்ச் 60) தலையங்கக் கட்டுரையை அப்படியே தருகிறேன் -

"கற்பனை எழுத்து உருவ வகைகளில் கவிதைதான் மிகச் சிறந்த வெளியீட்டு சாதனம் என்று சொல்லப்படு கிறது. கவிதையின் பாஷையே ஒரு தனித்தன்மை கொண் டது. ஒசை நய வார்த்தைகள், வார்த்தை தொடர்களால் அமைந்த ஒரு தனிச் சிறப்பான அமைப்பு முறைகளைக்