பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

கினது கவிதை. அது அவற்றை இஷ்டம்போல மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே இருக்க வேண்டும் என்ருல் இருக்காது."

கு. ப. ரா. புதுக்கவிதை முயற்சி பற்றி கூறியுள்ள இந்த வரிகள் திட்டவட்டமாகவே அதன் தன்மை பற்றி தெரிவிக்கின்றன. புதுக் கவிதையில் ஒலிநயம் இருப்பதன் அவசியத்தை அவர் உணர்ந்திருப்பது தெரிகிறது. அதை வெறும் பிரமை என்று தள்ளினதாகத் தெரியவில்லை. அவர் கூறி இருப்பவைகளுடன், ஃப்ரிவெரஸ் பற்றிய சில வரிகளையும் சேர்த்துப் பார்த்தால் புதுக்கவிதை முயற்சி செய்பவர்களது முறையான நோக்கு புலப்படும்.

நடுவில் ஒரு வார்த்தை, வசன கவிதை என்ற பதச் சேர்க்கை பற்றி, இந்த வார்த்தை எப்படியோ உபயோகத் துக்கு வந்து விட்டது. இங்கிலீஷ் மொழியில் செய்யப் பட்டு வரும், முப்பது வருஷங்களுக்கு முன்பு சோதனையாக ஒரு இலக்கிய இயக்கமாகவே ஆரம்பித்து செய்யப்பட்ட "ஃப்ரீ வெர்ஸ் என்ற சொல்லின் அர்த்தமாக கருதப்பட்டு உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனல் வசனம் என்ற, கவிதைக்கு மாறுபட்ட, ஒரு பதத்தை அதில் இணைத் திருப்பதால் தெளிவான ஒரு பொருளுக்கு: வியாக் யானத்துக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. இந்த பதச் சேர்க்கையை முன் வைத்தே வாதப்ரதிவாதங்கள் நடை பெறுகின்றன. வசன கவிதை என்பது கோவேறு கழுதை' விஜிடபிள் பிரியாணி என்று பரிகாசமாக பேசப்படுகிறது. புதுக்கவிதை முயற்சி என்ருல் அது வசன கவிதைதான், "யாப்புக்குப் புறம்பான வசனத்தை ஒடித்துப்போட்டு எழுதுவதுதான்’ என்று முடிவு கட்டப்படுகிறது.

புதுக்கவிதைகள் வசன கவிதைகளாகத் தான் இருக்கும் என்று கருதுவதற்கு இல்லை. வசன கவிதைகள் எல்லாம் புதுக் கவிதைகள் என்று சொல்லி விடவும் முடியாது. புதுக் கவிதைகள் உருவ அமைப்பில் மட்டுமல்ல; உள்ளடக்கம் சம்பந்தமாகவும் சில புதிய இயல்புகளைப் பெற்றிருப்பதாகும். சோதனை கு. டி. ரா.