பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 18

கவிதைக்கும் பல அம்சங்களில் உள்ள வித்தியாசம் தெரியும். பாரதியின் காட்சி வரிகளில் வரும் சொற்கள் 'சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும் உணர்வுள்ள சொற் களாக இருக்கலாம். ஆளுல் அவைகளின் சேர்க்கையிலே இசைத்தன்மை பிறக்கவில்லை. ஆனல் கு. ப. ரா. வின் கவிதையில் வரும் சொற்களும் சொற்கோவைகளும் தங்கள் கருத்து, உணர்வு இசையினுல் மட்டுமின்றித் தங்கள் ஒலி இசைவிலுைம் சிறப்பாக-முதன்மையாக-கவிதை ரூபத் திற்கு உதவி இருக்கின்றன.

புதுக் கவிதை சத்தான தாக்கான முயற்சி. அதன் எதிர்காலம், பழங்கவிதையின் இயல்பும் சிறப்பும் அறிந்து மரபை மீறி மரபு அமைக்கும் வழியாக கவிதை உள்ளம் படைத்தவர்கள் கையாளும் வழிவகைகளைப் பொறுத்து இருக்கிறது.”

15. எழுத்து 1960-61 கவிதைகள்

எழுத்துவின் இரண்டாவது ஆண்டு புதுக்கவிதையின் தரமான, வளமான, வளர்ச்சிக்கு வகை செய்தது. பிச்ச மூர்த்தியின் கட்டுரையும், தலையங்கமாக வந்த செல்லப்பா வின் கருத்துக்களும் பல எதிரொலிகளைப் பெற்றன. அதே சமயத்தில், கவிதை உள்ளமும் கற்பனை வீச்சும் உணர் வோட்டமும் உடைய உற்சாகிகளைக் கவிதை எழுதத் தூண்டின. புதிய நோக்குடனும் சிந்தனை விழிப்போடும் சேதனே ரீதியில் கவிதை எழுதும் உற்சாகத்தைச் சிலருக் குத் தந்தன.

கவிதை பற்றிய கட்டுரைகளும் அதிகம் தோன்றின. கவிதைக் கலை பற்றி முருகையனும், கவிதை வளம், சுயேச்சா கவிதை பற்றி தரும சிவராமுவும் எழுதிய கட்டுரைகள் குறிப் பிடத் தகுந்தவை. -

ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் கனமான கட்டுரைகளே எழுத்து வில் தொடர்ந்து எழுதிக் கொண் டிருந்த தரும சிவராமு 1950-ல் உணர்வு அனுபவங்களும்