பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

யிட்டு விட்டார்கள் என்று அந்தக் காலத்தில் ஒரு சிலர் எதிர்க்குரல் கொடுத்தது. உண்டு.

பாரதி ‘காட்சிகள்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பது வெறும் வசனம் அல்ல. தவறுதலாகக் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுவிட்ட வசன அடுக்குகள் என்று அதைக் கொள்வதும் சரியாகாது. என்றோ எழுதப்பட வேண்டிய கவிதைச் சித்திரங்களுக்காக அவ்வப்போது குறித்து வைக்கப்பட்ட துணுக்குகள் என்று அவற்றை மதிப்பிடுவதும் பொருந்தாது. பாரதியின் கட்டுரைகள் என்ற பெயரில் துண்டு துணுக்குகள், எண்ணச் சிதறல்கள் பற்பல காணப்பட்ட போதிலும், ‘காட்சிகள்’ முழுமை பெற்ற-நன்கு வளர்க்கப்பட்ட-சிந்தனைக் கட்டுமானங்களாவும், சொல் பின்னல்களாகவுமே அமைந்துள்ளன.

தனது எண்ணங்களுக்கும், அனுபவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வெவ்வேறு விதமான வடிவங்கள் கொடுக்க ஆசைப்பட்ட பாரதிக்குக் கவிதை ‘தொழில்’: இதய ஒலி : உயிர் மூச்சு. என்ருலும், கவிதை சில சமயங் களில் சக்தி இழந்து விடுகிறது. வசனம் அநேக சமயங்களில் கவிதையை விட அதிகமான வலிமையும் அழகும் வேகமும் பெற்று விடுகிறது. இதை பாரதியே உணர்ந்திருக்கிறார். இதற்கு ‘பாஞ்சாலி சபதம்’ நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணனை’ எனும் கவிதைகளும், பாரதி எழுதியுள்ள ‘ஸீர்யாஸ்தமனம்’ என்ற வசனப்பகுதியும் நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே அவர் ‘வசனகவிதை’ என்ற புதிய சோதனையை மேற்கொண்டார்.

மேலும் பாரதி ‘வடிவம்’ (ஃபார்ம்) பற்றி தெளிவாக சிந்தித்திக்கிறார் என்று கொள்ள வேண்டும், ‘வசனகவிதை’யில் வருவது இது--

"என்முன்னே பஞ்சுத்தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு ஒரு நியமம்
ஏற்பட்டிருக்கின்றது.