பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஒளியே, உயிரே, உயர்வே, வா!

அழுக்கின் உருவே அருகில் வா-உனே அணேத்துக் கொள்வேன் அஞ்சாதே

உலகின் அழுக்கைச் சுமந்தாலும் உள்ளத் தழுக்கில்லா உருவே அழுக்கைக் கடந்து வந்துவிட்டாய் - நீ அழுக்கின் உருவம் கொண்டுவிட்டாய்

பொய்யின் உருவே அருகில் வா-உஇனப்

புரிந்து கொண்டேன் ஓடாதே உலகின் பொய்யைச் சுமந்தாலும் உள்ளப் பொய்மையில்லா-உருவே

பொய்யைக் கடந்து வந்துவிட்டாய்-நீ

o

பொய்யின் உருவம் கொண்டுவிட்டாய்.

இருளின் உருவே அருகில் வா-நாம் இணைவோம் ஒன்ருய் விலகாதே

உலகின் இருகளச் சுமந்தாலும் உள்ளத் திருளில்லா உருவே இருளைக் கடந்து வந்துவிட்டாய் - நீ இருளின் உருவம் கொண்டுவிட்டாய்.

அழுக்கின் உருவே உன்னிதழில்

அமுதம் ஊறுவதெப்படியோ? பொய்யின் உருவே உன்னகத்தில்

புனிதம் ஒளிர்வ தெப்படியோ? இருளில் உருவம் உன் விழியில்

அருளொளி வீசுவதெப்படியோ?

தி. சோ. வேணுகோபாலனும், டி. கே. துரைஸ்வாமியும் தங்கள் சோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர்.

வேனுகோபாலன் வாழ்க்கைத் தத்துவங்களே சாதாரண நிகழ்ச்சிகளோடு பொருத்திக் காட்டி எளிய முறையில் கவிதைகள் இயற்றிஞர். உதாரணத்துக்கு "ஞானம்’ என்பதைக் கூறலாம்,