பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

2

3.

சொல்வ திரண்டு வகை சிந்தித்துச் சொல்லல்: சிந்தை இலேயாதல்! கரகம் அல்லது கண்கட்டு; இரண்டுக்கும் பொருள் சொன்னவன் புலவன்: கண்டவன் கலைஞன்! முழிப்பவன் நீயும் நானும் கேவலம் வாசகக் கும்பல்!

டி. கே. துரைஸ்வாமி சோதனைக்காகவே சோதனை என்ற தன்மையில் கவிதை முயற்சிகளில் தீவிரமாக முனைந்தது போல் தோன்றுகிறது. படிப்பவரைக் குழப்பமுற வைப்பது அவரது கவிதைகள் சிலவற்றின் முக்கிய நோக்கம் என்று எண்ண வேண்டியிருக்கிறது. க. நா. சு. புதுக் கவிதைக்கு வகுத்த இலக்கணத்தை -. கவிதை சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும். தெளிவு தொனிக்க வேண்டும். ஆளுல் சிக்கல் விடுவிக்க கூடாத தாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லே போல இருக்க வேண்டும்-அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது' என்பதை அப்படியே பின்பற்ற ஆசைப்பட்டவர் துரைஸ்வாமி என்று எனக்குப் படுகிறது.

அவர்னபேதம்’ என்ற கவிதையை அதற்கு உதாரண மாகக் கூறலாம்.

கற்புக்கு முல்லை; கடவுளுக்குத் தாமரை; காமத்துக்கு அல்லி, என்று சொன்னுல், முல்லைக்கு வெள்ளே; தாமரைக்குச் சிவப்பு.