பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

அகத்துறை என்று வகை செய்வது மன இயல் சாத்திரத் திற்குப் பொருந்தாது. இத் தொகுப்பில் கதைபோல் இருப்பவற்றில்கூட, கதைச் சுவையைவிட தொணிச் சுவை ஓங்கி நிற்பதைக் காணலாம். எதிர் காலத்து நெடுங் கவிதை இந்தப் போக்கில் செல்லாமல் கதைச் சுவையை நம்பிளுல் கவிதை அம்சம் குன்றிவிடும். கவிதை இனி நாவலுடனே நாடகத்துடனே போட்டியிட முடியாது.

புதுக்கவிதைக்கு ஏற்ற வாழ்நிலை ஏற்பட்டுவிட்டதை நாம் மறக்கக் கூடாது. அச்சுயந்திரமும், லேப்ரரிகளும், மெளன வாசிப்பும் தோன்றிய பிறகு,-அவை தோன்ருத காலத்தில் அமல் செலுத்திய கேள்வி மரபும் ஸ்தூலக்காதின் ஆட்சியும் கண்ணெதிரே மறைந்து வருவதைக் கண்ட பிறகு-கவிதையை வேறு விதமாக அமைக்க ஏன் முயலக் கூடாது?

ஸ்துலமான சொல்லுக்கும் நயத்திற்கும் அப்பாற் பட்ட பொருளும் அமையும் உண்டு என்பது என் நம்பிக்கை. அந்த அடிப்படைகளைத் தொட்டு நான் கவிதையை அமைக்க முயன்றிருப்பதால் பருந்தும் நிழலும் போலுள்ள இசையை இவற்றில் காணலாம். ஸ்தூலத்தை விட சூக்குமத்திற்கு அதிக சக்தி உண்டென்று அணுயுகம் நமக்குக் காட்டி விடவில்லையா?”

17. புதுக் குரல்கள்

  • கவிதைத் துறையில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கவிதைத் தொகுப்பு இது. பாரதிக்குப் பிறகு அந்த கவி காட்டிய பாதையில் சென்று உருவம் உள்ள டக்கம் இரண்டிலும் சோதனை செய்துள்ள 24 கவிகளின் 63 கவிதைகள் அடங்கு இருக்கின்றன. இந்த இருபதாம் நூற்ருண்டு மனிதனுக்கு தான் வாழும் உலகம் ஒரு விசித்திர போர்க்களம். அவனுக்கு ஏற்படும் மோதல்கள் சிக்கலானது. அவற்றின் வெளியீட்டை இந்த புதுக்குரல்