பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திேத

உலக இலக்கியத்தில் புதுக்கவிதையின் தோற்றம் குறித்தும், கவிதையின் தன்மை பற்றியும் இம் முன்னுரையில் கூறப்பட்டுள்ளவை கவனத்துக்கு உரியன.

மேற்கே இந்த புதுக்கவிதை பிறந்ததைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது லாபகரமானது, எந்த ஒரு கவியும் தன் காலத்தில் பிறந்தவன்தான் என்ருலும் அதுக்கும் மீறி எழுத்து அடிப்படைகளே, பேருண்மை கஜள, வ. வே. சு. அய்யர் குறிப்பிட்டிருப்பது போல அகண்டப் பொருளின் சாயைகளே காட்டுபவளுக என்றைக்கு மாக நிற்பவன். இருந்தாலும் ஒரு காலத்துக் கவி இதயம் பற்றிக்கொண்ட அம்சங்களே அடுத்த கால கவி இதயம் வாங்கிக் கொள்கிறதில்லை; முடிகிறதில்லை. மதிப்பு என்று சொல்கிருேமே அது தலைமுறைக்குத் தலைமுறை வித்தியாசப்படுகிறது. அடிப்படை மாருமல், மேல் மாற்றங் களாக, முகச்சாயல் மாறுதல்களாக ஏற்பட்டு வருவது தெரிந்தது. அபூர்வமாக அடிப்படையை தொட்டாலும் அடிப்படை வெள்ளத்துக்கு முன் நாணலாக வளைந்து கொடுத்து நிமிர்ந்து விடுகிறது. இந்த முகச்சாயல் மாறுதல் களில். உலுக்கல்கள் எந்த நாட்டு இலக்கியத்திலும் ஏற்படாமல் இல்லை. கிளாஸிஸம், ரொமாண்டிலிஸம், ரியலி ஸம் இப்படி கவியின் மனப்பாங்கிலே, உள்ளடத்திலே அனுபவ வெளியீட்டிலே மாறி வந்திருக்கின்றன.

இந்த மாறுதல்களில் ஒன்ருக, 1910க்கு மேல் இங்கி லாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள கவிகள் சிலர் சேர்த்து, கவிதைப் புளருத்தாரணத்தை குறிக்கோளாகக் கொண்டு இமேஜிஸ்ட்கள் என்ற கோஷ்டி உருவாகியது. பிரஞ்சு இலக்கியத்தை பின்பற்றி வெர்ஸ் லிப்ரெ என்ற சுயேச்சா கவிதை முறையின் சாத்தியங்களை ஆராய்வதில் அக்கறை காட்டிஞர்கள். சொன் சிக்கனம், சகஜத் தன்மை, பேச்சு அமைதி. செம்மை, நூதன படிமப் பிரயோகம் ஆகிய தன்மைகளை கவனித்து கவிதைகளை அமைக்கலானர்கள், டி.இ. ஹம், எஸ்ரா பவுண்ட், டி. எஸ். இலியட் போன்ருேச்