பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவிகள் பல, முக்கியமானது கவிதை, வசனமும் வசன கவிதையும் பிற. பாம்புப் பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை பாரதியின் வசனகவிதைச் சொல்லமைப்புக்கு ஒப்பிடலாம். பாரதி சொல் கிறார். .

“இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது
போலிருக்கின்றது,
ஒரு நாவலன் பொருள் நிறைந்த
சிறிய சிறிய வாக்கியங்கள்
அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது.

இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?

...பலவகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான்.”

பாரதியின் , வசனகவிதை முயற்சிகளும் - ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவதும்' 'பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக’ வாசிப்பதும் ஆகத்தான் அமைந்துள்ளன.

இந்த விதமான 'வசனகவிதைப் படைப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை பாரதிக்கு ஏன், எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இன்று சர்ச்சை செய்வது - சுவாரஸ்யமான யூகங்களுக்கே இடமளிக்கும். எனினும், பேராசிரியர் பி. மகாதேவன் கூறிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அபிப்பிராயமாகவே தோன்றுகிறது.

பாரதி . ரவீந்திரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார்; தாகூரின் ‘கீதாஞ்சலி’ மாதிரி அவரும் இதை எழுதினார் என்று மகாதேவன் சொல்லியிருக்கிறார்.

தாகூரின் ‘கீதாஞ்சலி’ முதலிய படைப்புகளை ரசித்த பாரதி அவற்றைப் போல் வசனகவிதை படைக்க முன்வந்திருக்கலாம். அக்காலத்தில் அவருக்கு வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆவ் கிராஸ்’ பாடல்களும் அறிமுகமாகி இருக்கத்தான் வேண்டும். மேலை நாட்டு நல்ல கவிஞர்களின் திறமையை அறிந்து கொள்ளத் தவறாத பாரதி விட்மனையும்