பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#41

கவிதைக்கு ஓவர் ஹாலிங் அதாவது பழுது பார்த்துச் செப்பனிடல் தேவை என்று கருதினர்கள்.

உருவம் விஷயம் இப்படி இருக்க. உள்ளடக்கம் விஷயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. ஃபிராய்டின் கருத்துக் களால் கவிஞர்களது அகநோக்கு இதுவரை கண்டிராத அளவு விரிவும் ஆழமும் பெற்றது. உணர்வு உலகத்தில் இன்னும் ஆழத் துளாவி துருவிப் பார்த்தார்கள். மென்மை யானதும், சிக்கலானதும் கூட்டுக் கலப்பானதும், திட்ட மான எண்ணத்துக்கு உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களே எல்லாம் சொல்லப் பார்த்தார்கள். கணக்கற்ற அணுக்களைப் போல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப் பதிவுகளே மாறுபடும், இனம் தெரியாத, ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கை வெளித் தெரிவிப்பது தங்கள் கடமை என்று கருதினர்கள். அதே சமயம் புற உலகமும் அவர்களே பாதித்தது. புதிய விஞ்ஞானத் தகவல்கள் பிரபஞ்ச விசாரணையிலே புதுப் பார்வைகளை ஏற்றின. வாழ்க்கை ஒரு ஐக்யத் தன்மை வாய்ந்தது என்பதோடு தொடர்ந்து ஓடும் ஒரு தாரை, சென்றது நிகழ்வதுடன் பிணைகிறது, நிகழ இருப்பதின் வெளிக் கோட்டை உருவாக்க ஒருகணம் மறுகணம் என்றெல்லாம் இருந்தாலும் ஒன்றை அடுத்து ஒன்ருக இடையருமல் தொடர்நிலையாக ஓடிக்கொண்டிருக்கும் கணப்பொழுது களால் ஆவது தான் வாழ்க்கை, ஒவ்வொரு நிகழ் கணப்பொழுதும் எல்லா காலத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது, அத்தகைய கணப்பொழுதில் நின்று பார்க்கிற கவிதையின் பார்வையின் காலம் வெளி இரண்டும் பேதமற்றுப் போய்விடுகின்றன என்ற காலம் வெளி பற்றிய கருத்துக்கள் பரவின.

ஆக, அகபுற உலக மாறுதல்களால் பாதிக்கப்பட்ட இந்த நூற்ருண்டு ஆரம்ப காலத்தவன் புதுக் கவியாக