பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தயாரிக்கப்பட வேண்டும். வளர்ச்சியும் புலகை வாய்ப்பு ஏற்படும்.

புதுக்குரல்கள் முதல் பதிப்பு வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்ட பிறகு, இப்போது அதன் இரண்டாம் பதிப்பு பிரசுரமாக வாய்ப்பு கிட்டியது. மதுரைப் பல்கலைக் கழகம் எம். ஏ. வகுப்புக்கு புதுக் குரல்கள் தொகுப்பை பாடப் புத்தகமாகத் தேர்வு செய்தது. இது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். ஆகவே, செல்லப்பா அதன் இரண்டாம் பதிப்பை 1973 ஜூலையில் கொண்டு வந்தார்.

இது "திருந்திய பதிப்பு, முதல் பதிப்பில் இடம் பெற்றிருத்த சில கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. சில கவிஞர்கள் அகற்றப்பட்டு, புதிதாக மூன்று பேர்கள் சேர்க்கப்பட்டிருக்கிருர்கள். சிலரது கவிதைகளில் முதல் பதிப்பில் அச்சாகியிருந்தவற்றில் சில படைப்புகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போதும் நண்பர் செல்லப்பா *தன்மூப்பாக செயல் புரியவில்லை; விமர்சகர் சி. கனக சபாபதியின் ஆலோசனையோடும் உதவியோடும் இத் திருத்தப்பட்ட பதிப்பை உருவாக்கினர் என்று அறிய முடிகிறது.

18. வளர்ச்சி

பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு காட்டு வாத்து", புதுக்கவிதைகளின் தொகுப்பான புதுக்குரல்கள் ஆகிய புத்தங்கள் வெளிவந்த பின்னர், புதுக்கவிதையை ஆதரித் தும், குறை கூறியும் எதிர்த்தும் அபிப்பிராயங்கள் பரவலாயின. -

பழம் தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சியும் புதுமை இலக்கத்தில் ஈடுபாடும் கொண்ட சி. கனகசபாபதி புதுக் கவிதை பற்றி எழுத்து' இதழ்களில் விரிவான கட்டுரைகள் எழுதினர். எழுத்து ஐந்தாம் ஆண்டில் (1963) இவை பிரசுரமாயின. - -