பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4;

இருக்கிருேம், இன்றைய புதுக்கவிதையின் குரல் மனத்தின் குரல். இதற்குமுன் என்றைக்குமே மனத்தின் குரல் கவிதை யில் கேட்டதில்லை. மேலும் இன்றைய புதுக்கவிதையின் குரலில் மனிதனைப்பற்றியும் கேட்பதை உணரலாம். பிராய் டும் கார்ல் மார்க்லம் கொடுத்த கொள்கைகளே இதற்குக் காரணம். (கனக சபாபதி கட்டுரையிலிருந்து)

இக்காலத்திய மனித மனங்களின் குரல் எப்படி எப்படி இருக்கிறது என்பதையும் விமர்சகர் சி. கனகசபாபதி நன்முக அ ள வி ட் டு ச் சொல்லியிருக்கிருர் அந்தக் கட்டுரையில். -

'மனத்தை ஊறுகாய் போட்டுப் புளிக்க வைக்கும் காலம் இது. கண்டது கடியதை விரும்பி நிரப்பி மணவீட்டை யாழ்படுத்துவோரும், திறந்த மனம் என்று பேசிக்கொண்டு மூடத் தெரியாதவரும், பரம்படித்துப் பணபடுத்தாத மனம் என்னும் தரிசான பொட்டல் வெளி கொண்டவரும், மனத் தின் அடிக்கல் நட்டு வைக்காமல் மேற்கட்டிடமும் பூச்சும் பெற்று உலா வருவோரும், மனம் திண்டாடித் திகைத்துத் தெருவில் நிற்பவரும் நம்மில் நிறைந்திருக்கக் காலம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. சுருக்கமாகச் சொன்னல், மனம் போன போக்கு மனநோய் கவ்விப் பிடித்திருக்கின்றன. விஞ்ஞான எந்திரத் தொழில் வளர்ச்சி நூற்ருண்டை. நிகழ் நொடி வாழ்வின் நரம்பில் செவ்விதும் அபத்தமும் சுரங்க ளாக அடுத்தடுத்து ஒலிக்கின்றன. கூர்பற்களுடன் சுழலும் எந்திரச் சக்கரத்தின் இடையே அகப்பட்ட பட்டுப்பூச்சி போல் இந்த நூற்ருண்டு வாழ்வு சிக்கித் தவிக்கிறது. என்ன காரணம் இதற்குச் சொல்லித் தொலைப்பது? பொருளேத் தேடும் முயற்சியிலும் உறவிலும் அருளேத்தேடும் ஆர்வத் திலும் ஆன்ம வேட்டையிலும் கெக்கலிப்புகளும் ஒலங்களும் சீறலும் சறுக்கலும் வெள்ளமிட்டு அடித்துவரும் நிலைதான் காரணம், நோயிலே படுத்துவிட்டது கண்முன்னே நூற்ருண்டு மனிதனின் மனம். இது நோன்பிலே உயிர்ப்பு பெறவேண்டும். சேற்றிலே குழம்பிவிட்டான் இம்மனிதன்.