பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



வசனத்தின் வறண்ட, அறிவு பூர்வமான சாதாரண இயல்பை மீறியது. கவிதையின் தன்மையைப் பூரணமாகப் பெருதது. எனவே தான். ‘வசனகவிதை’ என்று பெயர் பெறுகிறது.

பாரதி காட்டும் ‘காட்சி’களின் பல பகுதிகள் கவிதை ஒளி பொதிந்த சிறு சிறு படலங்களாகவே திகழ்கின்றன. ஆயினும் அவை கவிதை ஆகிவிடா. ‘வசனகவிதை’ எனும் புதிய வடிவத்தின் ஜீவனுள்ள சித்திரங்கள் அவை, திரும்பத் திரும்பப் படித்துச் சுவைப்பதன் மூலம் அவற்றின் நயத்தையும் உயர்வையும் தனித்தன்மையையும் உணர முடியும்.

2. இரட்டையர்

பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930 களின் பிற்பகுதியில் தான் துளிர்விடத் தொடங்கியது. பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தி தான்.

சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த ந. பி., ‘பிக்ஷ’ என்ற பெயரில் கவிதைகள் எழுதலானார். அவர் எழுதிய முதல் கவிதை எது, அது எந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று என்பது இப்போது தெரியவில்லை.

(நான் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தது 1934 ‘மணிக் கொடி’யில், காதல் முதல் கவிதை. தொடர்ந்து ‘ஒளியின் அழைப்பு’, கிளிக்குஞ்சு', 'பிரார்த்தனே’, ‘தீக்குளி’ முதலியவை ※1934-ம் வருஷ மணிக்கொடி'யிலேயே பிரசுரமாயின. 1934 முதல் நான் புதுக்கவிதை தொடர்ந்து எழுதி யிருக்கிறேன்’ என்று ந. பி. ஒரு கடிதம் மூலம் அறிவித்தார்.)

நான் முதன் முதலாகப் பார்க்க நேர்ந்த பிகஷ"வின் கவிதை ‘கிளிக்கூண்டு’. 1937-ம் வருடம் பிரசுரமான அருமையான இலக்கிய மலரான ‘தினமணி’ ஆண்டு மலரில்