பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Áői

இதெல்லாம் கதைகளா ஐயா, கழுத்தறுப்பு என்று சொன்ன வர்கள் உண்டு. -

அவர்களே இப்போது புதுமைப்பித்தன் என்ருல் ஆஹா என்கிருர்கள்.

இந்தப் பாராட்டுக்கும் கண்டனத்துக்கும் அர்த்தமே யில்லை.

சிறுகதை என்கிற உருவம் போல, புதுக்கவிதை என்கிற உருவம் தோன்றிவிட்டது-நிலைக்க அதிக நாள் பிடிக் காது.

. தமிழில் செய்யுள் எழுதுவது மிகவும் சுலபமான மாகி எழுதப்பட்ட செய்யுள் எல்லாம் கவிதை என்று சொல்கிற அளவுக்கு வந்தாகிவிட்டது.

இது எல்லா மொழி இலக்கியங்களுக்குமே பொதுவாக உள்ள ரிஷயம்தான். மரபு என்பதை மீறியே மரபுக்குப் புது அம்சங்களைச் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த அர்த்தத்திலே புரட்சியும் எல்லா மரபுகளிலுமே உள்ள ஒரு அம்சம்தான்.

கவிதை வழிகள் தடம் தேய்ந்து, தென்றல் காயவும், மதி தகிக்கவும், மலர் துர்க்கந்தம் வீசவும் (காதலால் அல்ல) தொடங்கிவிட்டது என்பதைத் தற்காலக் கவிதையைப் படிப் பவர்கனில் சிலராவது ஏற்றுக்கொள்வார்கள்.

இந்தக் கவிதை மொழி வார்த்தைகள், பொருள்கள், மதி, மலர், தென்றல், ஒளி இத்யாதி யெல்லாம் உபயோகத் தால் தேய்ந்து தேய்ந்து உருக்குலைந்துவிட்டன.

பழைய சந்தங்கள் போக, புதுச்சந்தங்கள், புது வார்த்தைச் சேர்க்கைகள், புது உவமைகள் இன்றுள்ள நிலமைக்கேற்பத் தோன்றியாக வேண்டும்.

லகஜியத் தச்சன் தேடிக் கைப்பிரம்பு இழைப்பதும், உருப்படாத வழியில் பான வனையும் குயவனின் பாண்டம் உருக்குலைவதும், உருக்குலைந்த சிறகொடிந்த் - வலிகுன்றிய சிந்தனைகள். இவை இன்று கவிதையே யாக மர்ட்டா,

புது-11 -