பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

(புதுமைப்பித்தன் பொறுப்பில் தயாரானது. அது) வெளிவந்தது.

“இருளின் மடல்கள் குவிந்தன.
வானத்து ஜவந்திகள் மின்னின.
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின.
மேற்கே சுடவையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி,
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு,
கட்டற்ற சிரிப்பு

காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்...”

இப்படி இனிமையாக ஆரம்பிக்கும் அழகான - வசன கவிதை அது. ('கிளிக்கூண்டு' என்ற இக்கவிதை, 1962-ல் சி. சு, செல்லப்பா தயாரித்த எழுத்துப் பிரசுரம் 'புதுக் குரல்கள்', 1964-ல் வெளியிட்ட ந. பிச்சமூர்த்தியின் 'வழித் துணை' ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது.)

“சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல் கவிதையைக் காணும் புதுக்கவிதை முயற்சிக்கு, யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத் தான் வித்திட்டது. அதைப் படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் ‘வசன கவிதை’யைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக என் உணர்ச்சிப் போக்கில் இக்கவிதைகளை எழுதினேன்” என்று த. பி. கூறுகிறார்.

வசனகவிதை ரீதியில் கவிதை எழுதுகிறபோதே, மரபு வழிக்கவிதை போல் தோற்றம் காட்டுகிற, ஓசை நயமும் செவிநுகர் செஞ்சொல் ஓட்டமும் நிறைந்த, கவிதை இயற்று வதிலும் பிக்ஷ நாட்டம் கொண்டிருந்தார். 1937 இறுதியில் மணிக்கொடி'யில் பிரசுரமான அக்கா குருவி' இதற்கு நல்ல உதாரணம் ஆகும். ' வசன காவியும்' என்றுதான் அது அச்சாயிற்று,