பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

7. கொலேகாரனின் தத்துவம்:இதுக்கென்ன பெரிய வாதம்? நான் கொலைகாரன் தான் பல கொலைகளேச் செய்தவன்தான். அப்போது, கழுத்தை அறுத்த போது வெள்ளரிப் பழத்தை அறுப்பது போல் அறுத்தபோது நான் கடவுளாக இருந்தேன் நான் நினைத்தால் உயிர் - கொடுக்கலாம், போக்கலாம், நீங்கள் யாரும் கொலேகாரன் ஆனதில்லை; அதல்ை நீங்கள் யாரும் கடவுள் ஆனதில்லை!

(எ 95)

'நரகம்’ என்ற கவிதை பற்றி முன்போ எழுதியிருக்கிறேன். மேலைநாட்டு நாகரிக வாழ்வை முற்றிலும் ஏற்றுக் கொள்ளா மலும் கீழ்நாட்டு வாழ்க்கை முறைகளே அடியோடு விட்டு விட இயலாமலும் திண்டாடுகிற இந்த நாட்டின் இன்றையப் பெருநகரத்தில் வசிக்கிற ஒருவனின் உணர்ச்சிக் குழப்பங்களே அது வர்ணிக்கிறது. காம உணர்வைத் துரண்டிவிடுகிற சூழ்நிலைகளும், சினிமா, இலக்கியம் கடற் புறம் போன்றவைகளும் - அனுபவிக்க ஆசை இருந்தும் வசதிசள் இல்லாமல் - ஏங்கித் தவிக்கிற ஒரு இனஞரின் உள்ளத்தை உணர்வுகளே, நினைப்பை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அக்கவிதை திறமையோடு சித்திரிக்கிறது.

வரும் போகும்’ எனும் நெடுங்கவிதையில் காணப்படுகிற சூழ்நிலையும் வாழ்க்கையும் அதேதான். ஆனல் கவிதைத் நலேவன் வேறு ரகம். அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு வீடு சேரும் துடிப்புடன் வந்து, பஸ்ஸுக்காகக் காத்து நிற்கும் ஒருவன் -இளமை குன்றியவன்-காண்கிற காட்சி களும். அவை அவனுள் எழுப்புகிற எண்ணங்களும் இதில் அழகாக விவரிக்கப்படுகின்றன.

காதடைக்கும் இரைச்சலுடன் டவுன் பஸ்கள் வரும் போகும்

મછા-12