பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$79

எத்தனை அருகில் வா எட்டி நில்; வஞ்சி நோக்கி வெடிப்போரிடம் எத்தனை கவர்ச்சி துள்ளல் ஆட்டம் எத்தனை தலைமுறை வேட்டையின் வளர்ச்சி எத்தனை சிக்கியதா தப்பிவிட்டதா. ‘மலட்டு ஒத்திகையின் மலட்டு முன்னுேட்டம் ஆன இது இளமையின் இனிமைக் கூத்தாய் சுவைக்கிறது. வந்து போகும் டவுன் பஸ்கள் பொய்த்துப் பொய்த்து, மேஜை மேல் பைலெனக் குவிக்கிறது கும்பலே'! இடம் பிடிக்கும் வலிமையும் கயமையும் இளமையும் இல்லாமல் நிற்கின்ற கவிதை நாயகன் வெளியிலே உருப்பெற்ற ஆசை உலா' கண்டு பொழுது போக்க வேண்டியதாகிறது.

இவன் மனம் குறுகுறுக்கிறது

யார் சொன்னர் இந்தியா பிற்பட்ட நாடென்று? முத்தர வகுப்பென்று? பிற்போக்கு நைலான் உடுத்துமா? கடை நடுத்தரம் கார் வலம் வருமா? இங்கே இப்போது தெரிவதெல்லாம் முற்போக்கு அறிவதெல்லாம் மேல்தரம்; வறுமை யேது, இங்கே இருப்பதெல்லாம் பெருமைதான் இன்பந் தான்; சிலோன் சீன பாக்கிஸ்தான் எதுவுமில்லை; இருப்பவை மவுன்ட்ரோடு வாய்ப்பேச்சு விழிவாள் வீச்சு பற்சர மின்னல் நகை ஜலதரங்கம் தேர்வு இழப்பு இளிப்பு இளமையின் இயல்பு. இரைச்சலோடு டவுன் பஸ்கள் வரும்போகும் இடத்தில், காலம் ஒட கால் வலிக்கக் காத்து நிற்கும் வசதியற்றவனின் மனம் பெரிய இடங்களின் யுவர்களும் யுவதிகளும் பயில்கிற நடுத்தெரு நாகரிகத்தை மேலும் மேலும் கண்டு சிலிர்க் கிறது எப்பவோ குடித்த ஒரு கப் காபி வயிற்றில் கரைந்து போன உணர்வு. கண்முன்னுலோ