பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86)

பசிக்காமல் உண்ண முடியாமல் திணித்து முடித்து விட்டு நீட்டிய தட்டில் எறிந்தபடிபிளேயர்ஸ் ஒன் பாக்கட்-ஒ ப்ே தி சேன்ஜ் வெயிட்டர் - ஒயிலாக சிகரெட் பற்ற வைத்து சுருள் சுருளாய் புகை கிளப்பி, தவளைக்குப் பாம்பின் வாய் விரிப்பாய் அவள் வியப்பின் விழிவிரிப்பை கடைக் கண்ணில் கணித்துடிரைவர், நீ போ. பட் பீ ரெடி அட் டென்.

காதடைக்கும் இரைச்சலுடன் டவுன் பஸ்கள் வரு கின்றன. போகின்றன. இவனுக்கு இடம் இல்லை.

சற்றே . மிகச் சற்றே தயங்கிப் பின் தங்கி இட்ட ஆடிக்கும் எடுத்த அடிக்கும் இசைந்தே ஆடும் சடையழகை நெளிந்தே குலேயும் பின்னழகை வெறித்து நோக்கி விருந்துண்டு, கிறங்கிடும் மனம் அவள் தோளில் கைபோட்டு நடத்து, தொட்ட சுகம் மயக்க இடித்தும் இணைந்தும் சென்று, கடற்கரையில் தனிமை இடம் தேடி இன்பம் சுவைத்து வியக்கிறது.

நின்ற இடத்திலேயே நிற்கும் அவனுள் ஆசை மலர்கள் விரிகின்றன. :

பஸ் வரும். போகும். ஒரு கப் காபி கரைந்து போயிற்றே என்ற தவிப்பு தலை தூக்குகிறது.

அவனது சிவப்புச் சேலை அழகி சிறிது நின்று போக மாட்டாளா என்ற ஏக்கம். பயன்தான் இல்லை,

செல்வம் இளமை யின்மை நடைபாதையில் காக்க வைக்கும் கூட்டம் குறையும் வரை. பொறுமை தீரும் வரை