பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயக்கம் தள்ளும் நேரம் சிவப்பழகி சற்று நிற்க புத்துணர்ச்சி துளிர்க்க .... இவனுக்கு இடம் கிடைத்து விடுகிறது. காசம் பிடித்து உலுக்குவதுபோல், துடிக்கின்ற பழுதுடல் பஸ் சூடேறிய காற்ருேடு, டீசலின் பெரு நாற்றத்தோடு நகர்கிறது. அந்தச் சூழலிலும்,

பக்கத்து மங்கையின் உரசல் பல்லற்ற வாய்க்குக் கரும்பு: ஆசைக்கு அழிவேது? செல்வம் மங்கை பெருமை இளமை இவைகளுக்கு அழிவேது? ஆயினும் இவன் நிலைமையோ? முதுமை, வறு:ை சிறுமை, நாய் வால் முதுகு, சீவாத தலையாகக் கலந்து சிதறிக் கிடக்கும் தாள்கள்,இப்பிறவியில் விடிவில்லை. பற்ருக்குறைச் சம்பளம், பொழுதுபோக்கு இன்றிக் கூடிப் பெற்ற ஒன்பது செல்வங்கள், நீங்காத ஆஸ்த்மா, நிரந்தரத் தொல்லைகள்; என்ன செய்வது? கனவு-செல்வம் மங்கை பெருமை இன்மை."

வசதியோடும் வளங்களோடும் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாது தவிக்கும் ஒரு அப்பாவி மனிதனின் அனுபவ உணர்வுகளே விரிவாய், அழகாய் விவரிக்கும் வரும்போகும்’ கவிதையிலும் சி. மணி நயமான புதுமையான உவமைகளைக் கையாண்டிருக்கும் திறமை ரசித்துப் பாராட்டத் தகுந்த தாகும். - இவரது மற்ருெரு நெடுங் கவிதையான பச்சையம்’ நோக்கும் தொனியும் வேறு ரகமானது.

'பாலுணர்ச்சி கூட்டி பச்சையாக எழுதுகிருர் கவிஞர் என்ற குற்றச்சாட்டுக்கு சி. மணி கூறும் எதிர்ப்புதான்