பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

அதே இதழில் லகு கவிதை' என்ற கட்டுரையும் இடம் பெற்றது. அது பூரணமாக நினைவு கூரத் தகுந்தது. *வெர்ஸ் லிப்ரே என்று பிரஞ்சு மொழியிலும், ஃப்ரீ வெர்ஸ் என்று இங்கிலீஷிலும் கூறப்படுவதின் தமிழ் அர்த்தம் லகு கவிதை, சென்ற நூற்ருண்டில் பிரான்சில் வாழ்ந்த ஜூல்ஸ் லா ஃபோர்க் (1860-1887) தான் இந்த வெர்ஸ் லிப்ரே அமைப்பை பிரஞ்சு மொழியில் கையாண்டவர். அது பின்னல் எஸ்ரா பவுண்டு, டி. எஸ். எலியட் போன்றவர்களால் இங்கிலீஷில் கையாளப்பட்டது. பிறகு மற்ற மொழிகள் பலவற்றுக்கும் பரவியது. நம் தமிழிலும் இந்த முறைக் கவிதைகள் நிறைய வெளிவந்திருக் கின்றன.

ஆல்ை மற்ற மொழிகளில் அவ்வப்போது இந்த வித முயற்சிகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் இருந்தது போலவே தமிழிலும் இன்று காணப்படுகிறது. திட்டவட்ட மானதாக கருதப்படும் யாப்பு உருவத்துக்கு மீறிச் செய்வது அடாத செயலாகக் கருதப்படுகிறது. இன்னும் ஏதோ தமிழ் கவிதை ஒன்றுக்குத் தான் மரபான, சாத்தான யாப்பு இலக்கணம் இருப்பது போலவும், உலகில் மற்ற மொழிகளுக்கு அப்படி எதுவும் இல்லாதது போலவும் நினைப்பு. --

எந்த ஒரு மொழி இலக்கியக் கவிதைக்கும் தன் தனக்கென யாப்பு அமைதி இருக்கத்தான் செய்கிறது. லா ஃபோர்க்கைப் பற்றி கூறும் போது, அவர் மரபான கவிதை உருவத்தை பெயர்த்து எறிந்து விட்டார் என்றும், சசின்டாக்ஸ்’ என்கிருமே சொற்புணரிலக்கணம், அதை சின்னு பின்னம் செய்து விட்டார் என்றும், துணிச்சலோடு அன்றைக்கு பழக்கத்தில் இருந்த சொற்களே புகுத்தினர் என்றும் சொல்லப்படுகிறது. இதே மாதிரி தான் எலியட், பவுண்டு போன்றவர்கள் இங்கிலீஷ் மொழியில் செய் தார்கள். ஆக, புதுக்கவிதை முயற்சி, தற்கால கவிதைப் போக்கு, தமிழில் செய்யப் படுகிறபோது ஏதோ புனிதம்