பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

கெடுக்கும் காரியமாக கருதுவது அர்த்தமற்றதாகும். உலக கவிதை மரபு அறிந்து செய்கிற காரியம். ஆகவே இந்த லகு கவிதை பற்றிய சில கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் ,

அமிலோவல் என்பவர் ஆயிரத்து தொளாயிரத்தி பத்துக்களில் இயங்கிய படிம இயக்கத்தில் சம்பந்தப் பட்டவர். அவருடைய கருத்து இது: "இலகு கவிதை என்பது பேசும் குரலின் ஒலி நயத்தின் அடிப்படையில் அ ைமக்கப்படுவது. திட்டமிடப்பட்ட சந்த அமைப்பை கடைப்பிடித்து உருவாக்குவது இல்லை. நம் சுவாசத்துக்கு ஏற்பவும் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிருர்.

இதை ஒட்டியே டி. எச். லாரன்ஸ் சொல்கிருர்: ஒலி நயம் என்கிற போது அகலமான இறக்கைகள் கொண்ட ஒரு பறவை வானில் பறந்தும் சறுக்கியும் வழுக்கிப் போவதையுமே நான் நினைக்கிறேன். எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிறுத்தல், ஒய்வு, உணர்ச்சிக்கு ஏற்ப குரல் சுதாவாக இழுபடுவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. கவிதையை ஆக்குவது துலக்கமாக உள்ள உருவம் இல்லை. உள்பொதிந்து மறைந்து நிற்கும் உணர்ச்சிப்பாங்கு தான்.

லாரன்ஸ் சிறந்த புதுக் கவிதைக்காரர்களுள் ஒருவர். அவரது பாம்பு’ என்ற கவிதை மிகச் சிறப்பாக கருதப் படுவது. அவரைப் போலவே டி. எஸ். எலியட்டும் ஒரு கவி. அவர் கூறுகிருர்: உருவத்திலிருந்து விடுதலே பெறுவது தான் லகு கவிதை என்ருல் ஒரு மட்டமான கவி தான் அதை வரவேற்பான். அது செத்துப் போன, ஒழிந்த உருவ வகைக்கு எதிரான ஒரு கலகம். புதிய உருவத்துக்கான ஒரு ஆயத்தம். அல்லது பழசை புதுப் பிப்பது ஆகும். வெளித் தோற்றமான ஒரு ஒருமிப்பு ஒரே மாதிரியாத இருக்கும். அதுக்கு எதிராக உள்ளமைந்த ஒருமிப்பைத்தான் இது வலியுறுத்தும். இந்த உள்ளார்ந்த ஒருமிப்பு ஒவ்வொரு கவிதைக்கும் தனி விதமானது."