பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#91

ஏப்ரல் முதல் அது 'காலாண்டு ஏடு” ஆக மாறி

விட்டது.

காலாண்டு ஏடு ஆக எழுத்து புதுக் கவிதைக்குச்

ச்ெய்த பணியை தனியாக ஆராய வேண்டும்,

24. காலாண்டு எட்டில்

‘எழுத்து காலாண்டு ஏடு ஆக, 1968-69 இரு வருடங் களில், எட்டு இதழ்கள் வெளி வந்தன. இவ் இதழ்களில் கவிதை எழுதியவர்களில் ந. பிச்சமூர்த்தி தி. சோ. வேணு கோபாலன், சி. சு. செல்லப்பா தவிர மற்ற அனைவரும் "புதிதாகப் படைப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களே ஆவர். பிச்சமூர்த்தி, சிந்தாமணி பில்வமங்கள் காதல் கதையை ஆதாரமாகக் கொண்டு, காதலின் இரவு' என்ற குறுங் காவியம் படைத்திருந்தார். இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைப் படைப்பு இது இவ் மரபு வழிக் காவியம், எழுத்து 119 ஆம் ஏட்டில் பிரசுரமாயிற்று. தி. சோ. வேணு கோபாலனின் கவிதைகள் தற்கால வாழ்க்கை அவலங்களே பரிகாசத் தொனியோடு சுட்டிக் காட்டின.

  • குருவி என்ருெரு கவிதை, காது கிழிபட கீச்சிட்டுக் கொம்மாளமிடும் குருவியை நோக்கி மனிதன் எரிச்சலுடன் கூறுகிருன்

ஊர் நிலவரம் உனக்கெங்கே தெரியும்? வாராவாரம் விரதம் இருந்து வயிற்றுத்தீ அவிக்க

வயிறெரிந்தது . வாங்கி வரும் பல சரக்கில்’ அரிசி மணி பொறுக்கி அரைக் குருடாய்ப் போயாச்சு!

காக்கை குருவி எங்கள் ஜாதி!?!

அவனுக்கென்ன? பாடினன்: