பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fg:

இக் கவிதை தூண்டிவிட்ட விளைவாக, செல்வம் இலக்கியத்தில் கண் வர்ணனை' என்ருெரு ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்தார். சங்ககாலக் கண்வர்ணனை, அதைத் தொடர்ந்து 19-ஆம் நூற்ருண்டு வரை பயின்ற கண் வர்ணனை, இந்த இரண்டு காலப் பிரிவுகளுள் கண்ணுவ மைகள் எவ்வெவ்வாறு வழங்கின என்ற தொகுப்பு, தற் காலத்தில் கண் வர்ணனை-உன் கண்கள் காட்டியபடி என நான்கு பிரிவுகளைக் கொண்ட நீண்ட கட்டுரை இது, எழுத்து இதழில் 18 பக்கங்கள் இடம் பெற்றுள்ள இக்கட்டுரை செல்வம் என்ற எழுத்தாளரின் பழந்தமிழ்ப் புலமையை, கவிதை ரசனையை, ஆய்வுத் திறமையை நன்கு புலப்படுத்துகின்றது. -

இந்த இரண்டு வருடங்களில், செல்லப்பா அதிகமாகவே கவிதைகள் இயற்றியிருக்கிருர். பல ரகமான சோதனைகளில் அவர் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளார். செல்லப்பாவின் கவிதைகளில் மாற்று இதயம் எனக்கு ரொம்பவும் பிடித் திருக்கிறது. இதயத்தை மாற்றி விட்டு இன்குெருவனின் இதயத்தை வெற்றிகரமாக வைக்கும் சிகிச்சை முதன் முதலாக நடைபெற்ற சமயம் அது. மாற்று இதய சிகிச்சை பற்றிய பேச்சுக்கள் அதிகம் அடிபட்டுக் கொண்டிருந்த காலம். அக்காலத்திய நிகழ்ச்சியால் துண்டப்பட்டு, செல்லப்பா மாற்று இதயம் கவிதையை எழுதியுள்ளார்.

மாற்று இதயம் வேண்டும் எனக்கு யாரிடம் இருந்து கிடைக்கும் எனக்கு? என்று கவி தேடுகிறர். தனது தேவையைத் தெளிவு படுத்துகிருர், படிப்படியாக. . -

என் இதயத்துக்கு ஒரு சரித்திரம் உண்டு. அது சிக்கு அழுத்து, வலிக்கு முனகியது. கர்தலுக்கு ஏங்கியது. பொருளுக்குத் தவித்தது, உணர்ச்சிக்குத் துடித்தது:அறிவுக்குப் பறந்தது. புரட்சிக்கு சீறியது; அமைதிக்கு விழைந்தது; புதுமைக்குள்ம்பியது; பழமைக்கு உருகியது.