பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#97

ஒ டாக்டர் உங்களுக்குத் தொந்திரவு தந்தேனே மன்ன்க்கவும், - சுவாரஸ்யமான இந்தக் ఊణ: வாழ்க்கை உண்மைகளை சிந்திக்கச் செய்கிறது.

செக் நாட்டில் சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்த போது, செல்லப்பா "இரணியம் பிறப்பதோ? என்ருெரு கவிதை எழுதினர். (எழுத்து 113) ரஷ்யப் புரட்சியை வரவேற்று முழக்கம் செய்த கவி பாரதியின் வரிகள் இதில் மிகுதியாக எடுத்தாளப் பட்டிருப்பது தவிர, பாராட்டத் தகுந்த நயங்கள் எவையும் இக்கவிதையில் இல்லை. எழுத்து 114-ஆம் ஏட்டில் செல்லப்பா சிரமப்பட்டு இயற்றிய 2009 வரிகள் கொண்ட குறுங்காவியம் நீ இன்று இருந்தால் பிரசுர மாயிற்று. 'மனிதர்க்கெல்லாம் தலைப்படு மனிதன்' மகாத்மா காந்தியின் வாழ்க்கை சரித்திரமும் சாதனையும் பற்றிய நெடுங்கவிதை இது.

‘உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் அங்கங்கே நெப்போலியன் காலம், பிரஞ்சுப் புரட்சி நாட்கள், ரஷ்யப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் நடந்த கட்டம் சம்பந்தமாக எல்லாம் நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் இயற்றப்பட்டிருப்பதைப் பார்க்கிருேம். ஆளுல் நம் தமிழ் இலக்கியத்திலோ கல்கி ஆரம்பித்து வைத்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ காலத்து கற்பித சூழ்நிலையைத் தாண்டி வரவில்லை இன்னும். கிழக்கு இந்தியக் கம்பெனி நாட்களுக் குக்கூட வரவில்லை. அப்படி இருக்க, காந்திகால சுதந்திரப் போராட்ட நாட்களுக்கு எப்போது வருவோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? அந்தக் காலத்தை சாட்சிக் காரணுக நின்று பார்க்கும் ஒரு பார்வை, ஒதுங்கி நின்று அந்த நாட்களே மதிப்பிட்டுப் பார்க்கும் சக்தி, படைப்புக்கு அதைப் பயன் படுத்தும் திறமை இன்னும் தமிழ்ப் படைப்புத் துறையில் ஏற்படாததே காரணமாக இருக்கக் கூடும் என்று செல்லப்பா சிந்தித்து மனப்புழுக்கம் வளர்த்திருக்கிருச்.