பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$99

காந்தியின் பிரவேசம், போராட்டங்கள், விஜனவுகன், சுதந்திரம் பெற்றது ஜனவரி 30 நிகழ்வுகள், காந்தி மறைந்ததும் பலரும் அறிவித்த கருத்துரைகள், விடுதல் பெற்ற இந்தியாவின் குழப்பங்கள், வளம் பெறுவதற்கான திட்டங்கள், சாதனைகள், வேதனைகள், சோதனைகள் மக்களின் நிலை பற்றி எல்லாம் மிக விரிவாக, 20 பகுதிகளில் (எழுத்து 20 பக்கங்கள்) 2000 வரிகளில், விவரிக்கப் பட்டுள்ளது. உணர்ச்சிகரமான பகுதிகள், வறண்ட பட்டியல்கள், பொறுமையை சோதிக்கும் பகுதிகள் நயமான பகுதிகள் எல்லாம் இக்காவியத்தில் உள்ளன. இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், பல நாடுகளின் வரலாற்றிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது என்ற சிந்தனையோடும்,

ஒரு வேளை நெஞ்சுக் குறையுடன் கரைந்த நீ மீண்டும் எம்மிடை வந்து பிறந்து இருபதாண்டு இளைஞனுய் சர்க்கா தத்துவம் தொடர சத்தியம் அகிம்சை நிலைநாட்ட சமயத்துக்கு எதிர்பார்த்து வளர்கிருயோ எங்களோடு?

என்ற ஆசை நினைப்போடும் காவியம் முடிகிறது.

இவ்வளவு நீளமாக எழுத வேண்டும் என்று ஆசைப் படாமல், கவிதைக்கு வேகமும் உணர்ச்சியும் அதிகம் கொடுத்து இன்னும் நன்ருக எழுதியிருக்கலாம் என்ற எண்ணத்தை இப் படைப்பு உண்டாக்குகிறது. இதில் வறண்ட முறையில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களே அதிக வலுவோடும் விறுவிறுப்பாகவும் வசனமாகக் கட்டுரை வடிவில் எழுத முடியும்-எழுதியிருக்கலாம்-என்ற எண்ணம் 1968ல் இதை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. இன்றும் அதே எண்ணத்தைத்தான் இக் காவியம் எனக்குத் தருகிறது.