பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மொத்தமாகப் பார்க்கிற போது. "நடை" தனது இரண்டு வருஷ வாழ்வில் கவிதைக்கு சிறப்பாகப் பணியாற்றியிருப்பது தெரிய வரும். இது பாராட்டப்பட வேண்டிய சாதனைதான்.

26. குருகூேடித்ரம்

எழுத்து’ம் நடை'யும் புதுக் கவிதை வளர்ச்சிக்குப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, தமிழ் இலக் கியத்தின் போக்கை ஒரளவுக்குப் பிரதிபலிக்கும் முயற்சி யாக குருஷேத்ரம் திருவன்ந்தபுரத்தில் தோன்றியது.

"குருஷேத்ரம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய முயற்சி. இது ஒரு சூழ்நிலையையும் அதன் விக்ளவையும் குறிக்கிறது. திருவனந்தபுரத்தைச் சார்ந்த, இலக்கியத்தில் ஈடுபாடு உடைய ஒரு சிலர் மூலதனங்கொண்டு உருவாகி யது. (குருஷேத்ரம்-அறிமுகம்).

இந்த இலக்கியத் தொகுப்பைத் தயாரித்தவர் நகுலன்' -டி.கே. துரைஸ்வாமி. இத்தொகுதியில் கட்டுரை, சிறுகதை, கவிதை, குறுநாவல், நாடகம் எல்லாம் உள்ளன. மலேயாளத் திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை, கதை,கவிதைகள் சிலவும் இதில் இடம் பெற்றுள்ளன.

  • குருஷேத்ரம் பாராட்டத் தகுந்த நல்ல தயாரிப்பு. படைப்பாளிகளின் ஒத்துழைப்பு நகுலனுக்குப் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எழுத்தாளர்கள் தாராள ஒத்துழைப்பு அளித்திருந்தால், குருஷேத்ரம் இன்னும் சிறந்த இலக்கியத் தொகுப்பாக விளங்கியிருக்க முடியும். நகுலன், அணுகிய படைப்பாளிகளில் அநேகர் தங்கள் எழுத்துக்களை குருஷேத்ரத்துக்கு உதவ முன்வராத காரணத்தால், சிலரது பல கதைகள், கட்டுரைகள், கவிதைகளே இந்த ஒரே தொகுப் பில் இணைத்தாக வேண்டிய கட்டாயம் நகுலனுக்கு ஏற்பட்டு விட்டது.

பிரமில் பரனுசந்திரன் (தருமு சிவராமு) கட்டுரைகள் 3, மெளனி கதைகள் 2, சார்வாகன் கதைகள் 2, தrணுமூர்த்