பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2籍

சாகாமற் சாகும் நாங்கள் நாங்களே

(மா, தrளுமூர்த்தியின் குளத்து மீன் புதுமையும் இனிமையும் ஒட்டமும் உணர்ச்சியும் கலந்த நல்ல கவிதை. அவரே. ஜான் டண் என்பவரின் நிழலைப் பற்றி ஒரு சொற் பொழிவு எனும் கவிதையையும் தமிழாக்கியுள்ளார். கதாலின் தத்துவத்தை நிழல்களோடு இணைத்து விளக்கு கிறது இது. -

காதல் ஒரு வளர்ச்சி, நிலையான ஒளி. நடுப்பகலுக்குப் பின் முதல் விநாடி இரவு என்று முடிகிறது. -

நகுலன் "இப்படியும் ஒரு கவிதை” என்று நான்கு பக்க விளக்கத்துடன் ஒரு சோதனை சிருஷ்டியை இத் தொகுப்பில் சேர்த்திருக்கிருர்.

எந்த ஒரு எழுத்துப் பத்தியையும் எடுத்துக் கொண்டு வார்த்தைகளே சொல் அமைப்பையும் மாற்றி அமைத்தால் ஒரு நூதன உருவைக் கொண்டு வரலாம் என்று வில்லியம் பரோஸ் என்பர் டைம்ஸ் லிட்டரரி சப்ளிமென்ட்"டில் எழுதி யிருந்த கட்டுரையைப் படித்த நகுலன், அக் கொள்கையை அவர் வழியில் ஏற்றுக்கொண்டு ஐங்குறு நூற்றின் பல பாடல்களிலிருந்து பல வரிகளே ஒன்று கூட்டி (அவை களுடன் கூடியவரை, அந்த நடைக்கு ஏற்ப என்னுல் இயன்ற வரை என் வரிகளையும் சேர்த்து’) ஒரு கவிதையை செய்திருக்கி ருர்,

இப்படியும் ஒரு கவிதை

நெய்தல்

காண்மதி பாண! நீ உரைத்தற்கு உரியை

(நெய்தல் 140)