பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

727

தொடர் சங்கிலி முழுதும் இன்பம் முற்றிலும் உணர்வு

வேடன்தாங்கலில் வந்து சேரும் பறவைகளை இதற்கு ஆதாரம் காட்டுகிருர் கவி.

தன்னினத்தைப் பேணும் உணர்வில், நெறியோ நீதியோ, நீண்ட கதைகளோ, கலாசார மரபோ, மமதையோ புகட்டாத மெய்யுணர்வால் மூவாயிரம் கல்தாண்டி

பறவைகள் வேடன்தாங்கல் தேடி வருகின்றன. அங்குள்ள நீர்ப்பரப்பு நடுவில் கவிந்த மரங்களில் தங்குகின்றன.

பறந்துவரப் பாதை உண்டா

பார்த்துத் தெளிவு பெற

படங்களுண்டா?

தவறைத் திருத்தப்

பகுத்தறிவுண்டா?

அப்படியிருந்தும், காட்டு வாத்து சைபீரியாவை விட்டு

வேடன்தாங்கல் வந்து, ஏரி நடு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து வளர்கிறது.

உயிரின் இயக்கத்தை

விண்டு வைக்கும் காவியத்தைக்

கண்ட பின்னும் உன்வழியைக் காணுயோ?

பாடம் கேட்காமல் .

பாதை காட்டாமல்,

குஞ்சுகளும் தாமாய்

சைபீரியா செல்லும்

இயல்புணர்வைக் கண்டபின்னும்

ஒளியைக் காணுயோ? - என்று கவி கேட்கிருள். .

'உயிரின் பெருமியக்கில் ஒளிந்தசையும் உள்விசையை,

சிந்தனையே அறியாத சிவந்த ரத்தம், உடலென்னும் ஒன்றைச் செய்யும் விந்தை விஞ்ஞானத்தை,