பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23i

செங்கால் நெடுக்கு வெண் பட்டுடம்புக் குறுக்கு, முடி யில் நீரை நோக்கும், மஞ்சள் கட்டாரி மூக்கு கொண்ட கொக்கு கூட வாழ்வும் குளம். செயலும் கல. நாமும் கொக்கு என்ற உண்மையை உணர்த்தி ஒரு தெளிவு பெற உதவுகிறது. அதை கொக்கு என்ற கவிதையில் காணலாம், கேட்பதல்ல காதல், தருவதுதான் -எண்ணி ஏங்கி எதிர்பார்த்து அன்பைக் கோரும் வே&ளயில் அன்பன் வரமாட்டான் ; எதிர்பாராத, தயாராக இராத தருணத்தில் அவன் வந்து அருள் புரிவான் என்கிற உயர்ந்த காதல் தத்துவத்தை ஆத்மீகமாக விரித்துப் பொருள் உரைக்க இடம் அளிக்கும் விஷயத்தை-பிச்சமூர்த்தியும் கவிதைப் பொருளாகக் கொண்டு சில கவிதைகளைப் படைத்திருக் கிருர், காதல், ராதை என்ற இரண்டு இனிய கவிதைகளும் இத் தரத்தவை. ..

'சினுக்கம் என்பதைக்கூட இதில் சேர்த்து விடலாம். அவனும் அவளும் தனித்தனி என்கிற பேதமற்று இருவரும் தன்மயமாய் ஆகிவிடும் அன்பு நிலையை-வீட்டில் இருந்தும், என்னுடன் வருகின்ருய். வெளியே சென்ரு லும், உன்னுடன் இருக்கின்றேன்’ என இருவரும் உயிரும் உடலுமாய் மாறி நிற்கும் தன்மையை-உணர்த்துகிறது இக் கவிதை.

இதில் வருகின்ற ஒரு உவமை -

ரயிலுக்கு ஜட்காவில் ஏறுமுன் உறவினர் வண்டிப் படியில், மதகு நீர் சுழலைப்போல் தயங்கி விடை கொள்ளுவர் என்பது அருமையாக இருக்கிறது. r

இக் காலகட்டத்தில், வாழ்வின் வெறுமையை. தொல்லேயை, ஏமாற்று வேலைகளே, போலிகளைக் குறித் தெல்லாம் பிச்சமூர்த்தி கவிதைகள் இயற்றியிருக்கிருர்.

வாழ்வின் அடிப்படையைக் குடைந்தெறிய முற்பட்டேன்.