பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

தருக்கமும் முடிவில்லா முட்புதரும், சப்பாத்திப் பழம் சடைத்த வெறுமையே வாழ்வாயிற்று.

(சுமைதாங்கி)

போலி, ஸ்விச், முரண் போன்றவை இத்தகையன.

வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சில அனுபவங்களே, காட்சிகளை, நயமான கவிதைச் சித்திரங்கள் ஆக்கியிருக் கிருர் அவர், கண்டவை, கலே, கைவல்ய வீதி, நடப்பு, பால்கடல் முதலியன இந்த விதமான படைப்புகள். படித்துச் சுவைக்கப்பட வேண்டிய நயமான கவிதைகள் ஆகும்.

கசப்பான உண்மைகளே பரிகாசத் தொனியோடுஅலட்டயர் ரீதியில்-கவிதையாக்கி யிருப்பது பிச்சமூர்த்தி யின் பிற்காலக் கவிதைகளில் காணப்படுகிற புதிய தன்மை,

சொல்லொரு சூது, இருபுறம் ஒடும் 3f5:5353 5656f. இருமுகம் தெரியும் பேதக் கண் ணுடி. காம்பில் படாமல் மரத்தில் தாக்கி மூர்க்கமாய் திரும்பி வரும் எறிகல். உண்மை என்று ஒரு தலே கடிப்பதை மாயை என்று மறுக்கும் இருதலைப் பாம்பு.

இதைக் கூறும் சொல்’ எனும் கவிதை இக்கூற்றை விளக்கும் உதாரணங்களையும் தருகிறது.

கடவுளின் படைப்புகளுக்குப் போட்டியாகவும், இயல் பான அமைப்புகளில் உள்ள குறைபாடுகளே அல்லது மடமையை, கலேயின் குறைவை நீக்கவும் மனிதர்கள் செய்கிற வித்தைகளையும் சாதனைகளையும், அறிவின்