பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

வர்க்கத்தை ஒடுக்கிவைத்திருக்க, அதை எதிர்த்து ஒடுக்கப் பட்ட வர்க்கம் நடத்தும் போராட்டத்தில் ஒடுக்கப் பட்டோர் பககமாக இப் புதுக்கவிஞர்கள் நிற்கவில்லை. மாருக, உலகமே துன்ப மயமானது என்ற நம்பிக்கை வறட்சியும் மன மொடிந்த போக்கும் கொண்டிருக் கிருர்கள்."

இக்கருத்துக்களுக்கு ஆதாரம் கூறும் விதத்தில் புதுக்குரல்கள் தொகுப்பிலிருந்து நா. வானமாமலை அநேக உதாரணங்களே எடுத்துக் காட்டியிருந்தார்.

  • எழுத்து’வில் புதுக்கவிதை சம்பந்தமாகக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த சி. கனகசபாபதி, புதுக்குரல்களே தனது நோக்கில் ஆய்வு செய்து புதுக்கவிதையில் சமுதாய உள்ளடக்கம் என்ருெரு விரிவான கட்டுரையை, நா. வா. கட்டுரைக்கு பதில் மாதிரி எழுதினர். அது தாமரை 1969 மார்ச் இதழில் பிரசுரமாயிற்று.

சி. கனகசபாபதிக்கு பதில் கூறும் முறையிலும், நா. வா. கட்டுரைக்கு மேலும் விளக்கம் ஆகவும் வெ. கிருஷ்ண மூர்த்தி எழுதிய புதுக் கவிதையின் உள்ளடக்கமும் சமுதாய உணர்வும் என்ற நீண்ட கட்டுரை 1969 மே மாத *தாமரை யில் இடம் பெற்றது.

புதுக் கவிதை எழுதுகிறவர்களுக்கு சமுதாயப் பார்வை' கிடையாது என்று அவர் அறுதியிட்டு உறுதி கூறியிருந் தார். சமுதாயப் பார்வை என்பது என்ன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவர்கள் நான் என்று குறிப்பிடுகிருர்களே அந்த "நான் என்ற உணர்வு மனித குல வரலாற்றில் இல்லாம லிருந்த நிலைமையும் ஒன்று உண்டு. இந்த நானுக்கும் சமுதாயத்திலுள்ள உற்பத்தி உறவுகளுக்கும் சம்பத்த முண்டு. - .

insoflářágir sorá ougäääriä (Tribal Societies) வாழ்ந்தபோது இந்த நான் எனது என்ற சிந்தனை இருந்திருக்க முடியுமா? அப்பொழுது சமுதாயம் முழுவதும்