பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

"நான் என்பதற்குப் பதில் நாம் என்ற சொல்லில் அடங்கியிருந்தது. ஏனெனில் சேகரிக்கப்படும் பொருள் சேகரிப்பவனுக்குச் சொந்தம் அல்ல. அது நமக்குச் சொந்தம் என்ற நிலை இருந்தது. அச்சமூகத்திலுள்ள தனி மனிதன் நான்’ எனது” என்ற நினேவு அற்று இருந்தான். சமுதாய நிலையில் ம்ாற்றம் ஏற்பட்டுத் தனியார் சொத்துடைமைமுறை வந்த பிறகே இந்த நான்' தோன்றியது. கட்டம் கட்டமாக இதன் தன்மை மாறிக் கொண்டு வருகிறது. முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் "நான் வேறு. இதற்கு முன்னர் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்த நானின் தன்மை வேறு. எனவே இந்த நான் சமுதாய மாற்றத்திற்குத் தகுந்தாற்போல மாற்றம் அடை கிறது. அதேபோல இந்த நான் சோஷலிஸ் சமூகத் தையும் படிப்படியாகப் பொதுவுடமைச் சமுதாயத்தையும் அடையும்பொழுது சமுதாயத்தோடு முரணின்றி ஒன்றி நிற்கும் தன்மையை அடைகிறது. இந்த நிலக்கு இட்டுச் செல்லும் போராட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்குத் துனே நிற்பது கவிஞனின் தலையாய கடமை. இதை உணர்வதையே உண்மையான சமுதாயப் பார்வை என்று நாம் சொல்கிருேம்.

மார்க்ஸ் பின்வருமாறு சொல்கிருர்: மனிதர்கள் , உற்பத்தியையும் உற்பத்தி உறவுகளையும் அபிவிருத்தி செய்கின்ற அதே சமயம், அவற்றிற்குத் தகுந்தவாறு தங்களையும், தங்களது சிந்தனைகளையும், தங்களது சிந்தனை களின் விளைவுகளையும் மாற்றிக் கொள்கிருர்கள். வாழ்க்கை என்பது மனத்தினுல் நிர்ணயிக்கப்படுவதல்ல; மாருக, உணர்வுதான் வாழ்க்கையால் நிர்ணயம் செய்யப்படு கிறது.”

இவ்வாறு அந்தக் கட்டுரை அறிவுறுத்தியது.

புதுக் கவிதை குறித்து மார்க்ளியே சிந்தனைக்காரர்கள் அவ்வப்போது ரசமான கருத்துக்களை வெளியிட்டிருக் கிருர்கள்,