பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

புதுக்கவிதை என்பது முதலாளித்துவ சமூகத்தில் சமூக உறவுகளின் மீது மனிதனுக்கு இருக்கும் தொடர்பு அறத் தொங்கும்போது தோன்றுகிற இலக்கிய வடிவமாகும்' என்கிருர் கிறிஸ்டோபர் காட்வெல். முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்திச் சாதனங்களின் அதிவேகமான மாறுதலில் பழஞ் சமூக உறவுகள் மாறுவது போலவே, பழஞ் சமூகத்தின் சிந்தனைகள், கொள்கைகள், இலக்கிய வடிவங்கள் இலக்கிய உத்திகள் போன்றனவும் மாறுபடும் என்பது பொருள்முதல் வாத வரலாற்றியல் கருத்தாகும். இம் முறையில் நாவலும் பூர்ஷ்வா இலக்கிய வடிவமாக விளக்கப்படும். இவ்வாறு இலக்கிய வடிவம், உத்தி முறை போன்றன மாறிய போது 20-ஆம் நூற்ருண்டின் மேல் நாட்டுச் சமூக, ஆன்மீகச் சிந்தனை நெருக்கடியால் தோன்றிய குழப்ப மன நிலை, வக்ர உணர்வு, மனித வெறுப்பு போன்ற பண்புகள் இலக்கியத்தில் இடம் பிடித்துக் கொண்டன. மேல்நாட்டு இறக்குமதிப் பொருளாய் தமிழில் வந்த புதுக் கவிதையும் மேல்நாட்டு நோய்க்கூருண மனித வெறுப்பு போன்றவற்றை நகல் செய்து தமிழ்க் கவிதை உள்ளடக்கமாக மாற்றியுள்ளது.”

இவ்வாறு தமிழவன் தாமரை கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிருர்.

சதாமரை அவ்வப்போது இவ்விதமான கட்டுரைகளைப் பிரசுரித்ததோடு முற்போக்குக் கருத்துக்களை உள்ளடக்க மாகக் கொண்ட புதுக் கவிதைகளை வெளியிடவும் முன் வந்தது. பிற நாட்டு முற்போக்குக் கவிஞர்களின் படைப்புக் க:ளத் தமிழாக்கியும் பிரசுரித்தது. இப்படியாக, கால ஓட்டத்தில், தாமரை புதுக் கவிதைக்கு அதிகமான இடம் ஒதுக்கி முற்போக்குக் கவிஞர்கள் வளரத் துணை புரிந்தது.

இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளில் ஒருவரும், கலே இலக்கியத் திறய்ைவாளரும் ஆன கார்த்திகேசு சிவத்தம்பி இது சம்பந்த பிாக எழுதி புள்ள கருத்து ரையை