பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

வாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக் கவிதைப் பயில்வு எ லீற்றிசத் தொழிற்பாடே எனலாம். -

எலீற்றிசத்தைப் பின்பற்ற முனைவது இன்றைய பண் பாட்டமிசங்களில் ஒன்று. மேற்குறிப்பிட்ட சமூக, பொருளா தாரப் பின்னணியில் வராதவர்கள் புதுக் கவிதையைப் பயிலும் பொழுது அது மேனிலேத் தழுவல் என்றே கூறல் வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்டில் செவிப்புல துகர்வின் நிலை பற்றியும் நாம் சிறிது நோக்குதல் வேண்டும். கிராமியக் கலைகளின் வளர்ச்சி. கிராமியப் பாடல்களின் பயில்வு, பாரம்பரிய நிலையின் ஸ்திரப்பாட்டினே எடுத்துக் காட்டுகின்றது. கட்புலச் சாதனமாகிய சினிமாவின் செவிப் புல அமிசமாகிய வசனமும் பாடலும் தமிழக சினிமாவில் பெறும் முக்கியத்துவத்தினேயும் இங்கு நோக்கல் அவசியம், கவிதையைப் பொறுத்த மட்டில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் ஆகியோரின் திறமை காரணமாகச் செவிப்புல நுகர்வுக்கே பயன்படும் திரைப்படப் பாடல்கள் இன்று கவிதைகளாகியுள்ளதையும் சனரஞ்சகக் கவிதை களாக விளங்குவதையும் நாம் காண்கின்ருேம், கிராமியப் பாடல்களின் மறுமலர்ச்சியும், சினிமாப் பாடலின் முக்கியத் துவமும், புதுக் கவிதை வளர்ச்சிக்கான சூழ்நிலையை அடி நிலை மக்கள் நிலையில் அகற்றி விடுகின்றது.

இவ்வேளையில் புதுக் கவிதையாளர்களின் கருத்துக் களையும் மகுேபாவங்களையும் ஆராயும் பொழுது இப்பயில் வாளர் நகர நாகரிகத்தின் சாயல்களைப் பிரதிபலிப்பதையும் நாம் காணலாம். -

இக்கட்டத்தில், முற்போக்கு இலக்கிய கடப்பாடுடைய *தாமரை புதுக் கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்பட வேண்டியதொன்ருகும். தமிழ் நாட்டின் கிராமியக் கலை ஆய்வுக்கு நவீன இலக்கியத்தில் தளம் அமைத்துக் கொடுத்த தாமரை இன்று புதுக் கவிதைப் பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா!