பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24?

அல்லது அவர்களேச் சார்ந்த சிலர், தங்களை இரண்டாவது அணி என்று சொல்லப்பட வேண்டிய இயக்கமோ, திரளோ சக்தியோ எதுவுமே ஏற்பட்டிருந்ததில்ஜல.

இலக்கிய ஈடுபாடுடையவர்கள் - இலக்கியத்தின் ఖి விதப் போக்குகளிலும் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்த வர்களும் பெற முயன்றவர்களும்-தனி நபர்களாகத் தங்கள் தங்கள் இஷ்டம் போல் எழுதிக் கொண்டிருந்தார்கள். எதைப் பற்றி வேண்டு மாலுைம. எப்படி வேண்டு மாலுைம் எழுதலாம். ஆளுல் எழுதுவதை அழகாகவும் கலையாகவும் ஆற்றலோடும் எழுத வேண்டும் என்ற இலக்கிய நோக் குடையவர்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் தங்களது மன எழுச்சிகளைக் கவிதையாக்குவதில் உற்சாகம் கொண் டிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே வெற்றி பெற்ருர் களா-என்பது வேறு விஷயம்,

புதுக் கவிதை எழுதித் தேர்ச்சிப் பெற்றவர்களின் படைப்புக்களேயும், ஆர்வத்தோடு எழுத முற்பட்டவர்களின் எழுத்துக்களையும் எழுத்து’ பத்திரிகை வெளியிட்டு, புதுக் கவிதை வளர்ச்சிக்குத் துணை புரிந்தது". "எழுத்து'வுக்குப் பிறகு, புதுக் கவிதைக்கு ஆதரவு காட்டுவதில் கணேயாழி' மாத இதழ் முன்னின்றது. எழுத்து நடந்து கொண்டிருந்த காலத்திலேயே கணேயாழி' தோன்றிவிட்டது. புதுக் கவிதைக்கு வரவேற்பு அளித்து வந்தது. பின்னர், புதுக் கவிதை எழுதியவர்கள் கணையாழி'யின் ஆதரவை உற்சாகத் தோடு ஏற்று தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.

"எழுத்து வோடு ஒத்துழைத்து பல வருஷங்களுக்குப் பிறகு "நடை" என்ற புது முயற்சியில் ஈடுபட்ட இலக்கிய உற்சாகிகள் சிலரும் அவர்களுடைய நண்பர்களும், 1910ல் 'கசடதபற'வை ஆரம்பித்து, புது வேகத்தோடு இலக்கியப் பணி புரிய முன்வந்தார்கள். புதுக் கவிதை வளர்ச்சிக்கும் சோதனைக்கும் 'கசடதபற’ பேராதரவு தந்தது.

1970லும் அதற்குப் பிறகும் இலக்கிய உணர்ச்சி பல வகைகளில் செயல் மலர்ச்சி பெற்றதாகத் தோன்றியது.