பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

புதிய புதிய இலக்கியப் பத்திரிகைகளும், இலவச வெளியீடு களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தலே தூக்கின. கவிதைத் தொகுப்புகளும் வெளிவரலாயின. சேனல் பாதிப்பு மாதிரி-அல்லது, அந்தச் சமயத்துக்கு எடுப்பாக தோன்றி வேகமாகப் பரவும் ஃபாஷன் போல-(மழைக் காளான்கள் போல் என்றும் சொல்லலாம் மினி' கவிதை வெளியீடுகள் எங்கெங்கிருந்தெல்லாமோ பிரசுரம் பெற்றன. இவற்றில் எல்லாம் மார்க்ளியேப் பார்வை' உடைய எழுத்தாளர்களும், பொதுவான இலக்கிய நோக்குடையவர் களும் கவிதைகள் எழுதியிருக்கிருர்கள், முற்போக்கு இலக்கியப் பணிக்கென்றே தோன்றிய தாமரை, கார்க்கி, செம்மலர், வானம்பாடி, உதயம் முதலிய பத்திரிகைகளில் கவிதை எழுதியவர்களில் சிலர் இதர இலக்கிய வெளியீடு களிலும் எழுதியிருக்ல்ருர்கள், х

கணையாழி, கசடதபற, தீபம், ஞானரதம், அஃ போன்ற இலக்கிய வெளியீடுகளில் கவிதை எழுதியிருப்பவர்களில் சிலர் பிற வெளியீடுகளிலும் எழுதியிருக்கிருர்கள். வண்ணங்கள், சதங்கை போன்ற இலக்கியப் பத்திரிகைகள் இரண்டு பிரிவுக் கவிஞர்களின் படைப்புக்களையும் பிரசுரித் துள்ளன.

குறிப்பிட்ட சிலர் அல்லது பலரது பெயர்களும் படைப் புக்களும் தான் பொதுவாக அநேக பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் காணப்படுகின்றன.

ஆகவே, இனி வரும் ஆய்வை இதுவரை செய்தது போல், தனித்தனிப் பத்திரிகையாக எடுத்துக் கொண்டு கவனிப்பது சரிப்பட்டு வராது என்று நான் நினைக்கிறேன். பத்திரிகையாக எடுத்துக்கொண்டு, அவ் அவற்றில் புதுக் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதுவதை விட எழுபதுகளில் வந்த இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ள படைப்பாளி களின் புதுக்கவிதைகள், அவற்றின் போக்குகள் தன்மைகள் பற்றி எழுதுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருது கிறேன். -