பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

கிருேம், சிரித்து அழுகிருேம். இதை எல்லாம் வெளிக் காட்ட கலைஞனுக்கு ஆத்திரம். எண்ணிய, திண்ணிய, மண்ணிய, புண்ணிய என்று கட்டங் கட்டும் வரம்புகட்கு உட்பட அவனுக்குப் பொறுமையில்லே என்பது மாத்திர மல்ல. உட்பட மறுக்கிருன். இதில் ஒரு அலை புதுக் கவிதை.

பல பக்கங்கள் கொண்ட வைரக்கல் போன்றது புதுக் கவிதை. ஒரு பக்கம் அழகு. புதுமாதிரியான அழகு. வியக்கும் அழகு.

ஒரு பக்கம் ஏக்கம், மன முறிவு, பெருமூச்சு, காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல், சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே குடைந்தெடுத்து ஆராயும் நேர்மை, பாலுணர்ச்சி பொங்கல், ரேஷன், காந்தீயம், கம்யூனிஸம், அறச் சீற்றம், ஸ்வதரிசனம், டிவால்யுவேஷன் காலை இரவு நிலா வர்ணனைகள், கனவு மயக்க நிலைகள், ஞானம், உபதேசம், இறுமாப்பு, மனமறுகல் - இப்படிப் பல பல பக்கங்கள் உண்டு. சுருங்கச் சொன்னுல், இன்று நம்மிடையே இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தின் பிரதி பலிப்பையும் நாம் புதுக் கவிதையில் காண்கிருேம்.

வரைமுறையற்ற தன்மை, நூதனப் படிமங்கள், மயக்க நிலையையும் வெளிப்படுத்தும் முறை, கொச்சை மொழிப் பிரயோகங்கள் முதலியவை எப்படிப் புதுக் கவிதைக்கு வலு வேற்றுகின்றனவோ பலவீனப்படுத்தும் சாதனங்களாகவும். அமைவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞன் விழிப்போடிருக்க வேண்டும். நான் எப்படி விமர் சகர்களைப் பார்த்து, இது பழசா புதுசா என்று முதலில் பார்க்காதீர்கள். கவிதையா அன்ரு என்று பாருங்கள் என்று கேட்கிறேனே. அதே போல படைப்பாளி களுக்கு (என்னையும் சேர்த்துத் தான்) புதுக் கவிதை படைக்க வேணும் என்று நினைக்காமல், கவிதை செய்ய வேணும் என்று நினையுங்கள்’ என்று கூற விரும்புகிறேன்.

எப்படி யாப்பிலக்கணப்படி எழுதியதெல்லாம் கவிதை யாகாதோ, அப்படியே அவ்விலக்கணம் தப்பிப் பிறப்பு