பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

தெல்லாம் புதுக் கவிதை ஆகிவிடாது. அது போலவே, எழுதியவனுக்கே புரிந்திராத அதிர்ஷ்டமான கவிதை மிக உயர்ந்த புதுக் கவிதை ஆகிவிடாது. ச்ொல் புதிது, பொருள் புதிது, கற்பனை வளம் புதிது, பேசாப் பொருளைப் பேச நான் துணிகிறேன் என்பதோடு, விளங்காப் பொருளே விளக்க நான் முயல்கிறேன் என்பதையும் நான் நினைவுறுத்தி கொள்ள வேண்டும். நான் விழிப்புடன் இல்லாவிட்டால், என்ஜனயே ஏ மாற்றிக் கொள்ளப் புதுக் கவிதையில் வாய்ப் புண்டு. படிமங்களையும் ஃபிராய்டின் குறியீடுகளையும் கொட்டி நிரப்பி, சொற்களை வெட்டி ஒட்டி புதுக் கவிதை யின் உருவமில்லாத உருவத்தில் புரியாத்தனத்தையும் சேர்த்து நான் எழுதிவிட்டு அதைப் புதுக் கவிதை என்று உலாவ விட்டுவிட முடியும். நான் கெட்டிக்காரனுளுல், எட்டு நாளேக்காவது ஊரை என் புலமையில் நம்பிக்கை வைக்கச் செய்துவிட முடியும். புதுசானதினலே; இப்படி நேர்வதும் நேராதிருப்பதும் கவிஞனின் நேர்மையைப் பொறுத்தது.

  • நான் எழுதியிருப்பது கவிதைதான, அது எனக்கு விளங்குகிறதா என்று நானே உரைத்துப் பார்த்துக் கொண்டால்தான், நான் தோண்டியெடுத்திருப்பது தங்கமா கல்லா என்று எனக்குத் தெரியும், தங்கத்தின் மாற்று பார்ப்பது மற்றவர்கள் வேலை. -

(சார்வாகன் -‘புதுக்கவிதை”) இனி கசடதபற கவிதைகளைக் கவனிக்கலாம். கசடதபற’ வின் முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன். இவரது தனி நோக்கு, கவிதையாற்றல் குறித்து நடை: பற்றி எழுதுகையில் ஓரளவு சொல்லியிருக்கிறேன். பின்னர் ஒரு சமயம். - - * -

அரசாங்கத்துக்கட்டிடத்தில்

தூக்கம் போட்ட முதல் மனிதன் நீ தான் என்னும் காரணத்தால்