பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్రీ

என்று கேட்கும் கொடும்பாவி’யும், ஒடிக் கோப்பைகளை ஜெயித்தவனே, கிறுகிறுக்கப் பண்ணி கீழே விழ வைத்துக் கோப்பைகள் ஜெயிப்பதைக் கூறும் வெற்றி"யும் கங்கை கொண்டானின் நல்ல கவிதைகள். புதிதாகக் கவிதை எழுத முன் வந்தவர்களின் சிற்சில படைப்புகள் ‘கசடதபற'வில் இடம் பெற்றுள்ளன. ஜரதுஷ்டிரன் எழுதிய இழப்பு, விழிப்பு, பரிணுமம் நல்ல கவிதைகள்.

கல்யாண்ஜியின் கவிதைகளில் இதயவீன துரங்கும் போது அருமையானது.

பேசும் பாரென் கிளியென்ருன் கூண்டைக் காட்டி வாலில்லை வீசிப் பறக்க சிறகில்லே வானம் கைப்பட வழியில்லை பேசும் இப்போது பேசுமென மீண்டும் மீண்டும் அவன் சொல்ல பறவை யென்ருல் பறப்பதெனும் பாடம் முதலில் படியென்றேன்." எஸ். கே. ஆத்மாநாம் புதிய பார்வையோடு விஷயங் களை அணுகுகிருச். என் கால்கள் நடந்த தெரு பெற்ற பரினமங்களைக் கூறும் காலம்’, இங்கே வருமுன்னர் இருந் தவை பற்றிச் சொல்லும் ஆரம்பம்’ போன்றவை பாராட்ட வேண்டிய முயற்சிகள். மற்றும் பலர் அபூர்வமாக ஒன்றிரண்டு கவிதைகள் எழுதியுள்ளனர். 'கசடதபற’ மொழி பெயர்ப்புக் கவிதையும் ஓரளவு பிரசுரித்தது.

கசடதபற’ புதுக் கவிதைத் துறையில் வேருெரு வேக மலர்ச்சிக்கும் வழி அமைத்துக் காட்டியது. அதன் இதழ் களில் வந்த கவிதைகளில் தெர்ந்தெடுத்துத் தொகுத்து புள்ளி என்ருெரு மினி வெளியீடு பிரசுரித்தது. *?(E ரூபாய் நோட்டை இரண்டாக மடித்த அளவில் தயாரிக்கப் பட்ட அந்த வெளியீடு தமிழ் நாட்டின் எதிர்பார்க்க முடியாத இடங்களிலிருந்தெல்லாம் புதிய புதிய மினிக் கவிதைத் தொகுப்புகள்’ வெளியிடுவதற்கு உற்சாகமூட்டும் முன் மாதிரியாகத் திகழ்ந்தது.