பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

- குதர்க்கமான-பொருள் கூறல்களே எல்லாம் கருத்து நயம் கொண்ட கவிதைகள் என்று அநேகர் எழுதினர்கள்.

தாஜ்மகால்

ஷாஜஹானின் சலவைக் கல் கண்ணிர்.

காந்தி இந்நாளில் இந்தியர்க்குச் சிக்கியதோர் சீதக்காதி.

சரித்திர நாவலாசிரியர்கள் பாலைவனத்துக் கானல் நீரில் படகினை ஒட்டும் பரம பிதாக்கள்

z புழுதி வேகமாய் மிக ஆர்வமாய் பஸ்ஸைப் புணர்ந்த மண்ணின் பிரசவம்.

ட்ராக்டர்

வெட்கம் சிறிதுமின்றி ஊரறிய உலகறிய மண் என்னும் மங்கையைக் கற்பழிக்கும் கயவன். இப்படிப் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். சாதாரண நடப்புகளையும், சந்தேகங்களேயும், சில பிரச்னைகளையும், உரைநடையாக நேரடியாக எழுதாது. வார்த்தைக்குக் கீழ் வார்த்தையாக அடுக்கி, ஒரே வாக்கி யத்தைப் புதுக் கவிதை'யாகக் காட்ட முயல்கிற வேலை களும் நடைபெற்றுள்ளன.